உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

111

வழியாக நிலைக்கச் செய்ய வேண்டுமென்ற கருத்தினாலோ? சிலர், இதன் (இப்பிராமணத்தின்) தொல்லை வரம் பழித்து அது கூறப்படும் தருக்கவிலக்கணத்தைப் புரையறக் கற்ற தாகத் தருக்கிச் சில பத்திரிகையில் வரைந்திருப்பது நண்பர்கள் அறிந்திருக்கலாம்.. யுக்தி நியாயங்களுக்குத் தம் மதம் (நடுவு நிலைமை நி

பொருத்தமுடையதாயில்லாவிடில்

கருதினவராயிருந்தால்) அவைகட்குப் பொருத்தமுடைய தாயிருக்கும் ஒரு மதந்தேடி அதை யனுசரித்துப் பெருமை பெறுதலே புத்திமான்கட்கழகாகும். அதைவிடுத்து யுக்தி நியாயங்கட்கேற்ப அதியுசித ஏற்பாடுகளோடு கட்டப் பட்டிருக்கும் ஒரு சமயத்தைத் தூஷித்து, அதை யனுசரித்துத் தம்மட்டிலொழுகி வாழும் பெரியாரது மன வருத்தத்தையும் வருவித்து, தொல்லை இலக்கண விலக்கியங்களின் வரம் பையும் அழித்து வருவதென்றால், உடனே, அவரது மிகை பட்ட சய்கையை உலகங் கண்டியாது விடுமோ? இனி யெமதுண்மையை விரிப்பாம்.

அருத்தாபத்திப்பிரமாணம் தொல்லாசிரியர் பலராலும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்துள் “எடுத்த மொழியினஞ்செப்பலுமுரித்தே” எனும் சூத்திரத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியார் “அருத்தா பத்தி இனஞ் செப்புமாறு தன்னோடுமறுதலைப்பட்டு நிற்பது ஒன்று ள்வழியாயிற்று. மறுதலைப்பாடு பல உள்வழிச் செப்பாது என்றுரை கூறி ‘அறஞ்செய்தான் துறக்கம்புகும் என்றவழி, மறஞ்செய்தான் நிரயம்புகும்' என்பது இதனாற் பெறப் படுமென் றுதாரணமுங் காட்டினார். எனவே, இனமாய பொருள் இரண்டுள்வழி அருந்தாபத்திப் பிரமாணம் பயன்படுதலும், பலவுள்வழி அது பயன் படாமையும் நன்கு விளங்கும். ஆவாழ்க" என்றால் ஏனையவெல்லாம், இறந்துபடல் வேண்டுமென்பது கருத்தா காமையால் இதில் அருத்தாபத்திப் பிரமாணம் வற்புறுத்தாது; ஆவிற்கு மறுதலைப்பொருள் எருமை, குதிரை, ஓட்டகமெனப் பலவிருத்தலாலென்க. சந்திரன் இரவை விளக்குமென்றால், சூரியன் பகலை விளக்குமென்பது கருத்தாதலின் இதில் அருத்தாபத்திப் பிரமாணம் பயன்பட்டது; சந்திரனுக்கு

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/144&oldid=1590188" இலிருந்து மீள்விக்கப்பட்டது