உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் 26

மறுதலைப் பொருள் சூரியன் ஒன்றேயாகலான். வருத்தா பத்திப் பிரமாணம் சிறுபான்மை அனுமானப் பிரமாணத்துள்ளும் அடங்கும். அனுமானப் பிரமாணத்துள் அருத்தா பத்திப் பிரமாணம் அடங்குமென்பது, ஆசிரியர் சிவஞான யோகிகள் மொழிபெயர்த்தருளிய தருக்கசங்கிரக வுரையிற் காண்க. இன்னும் அருத்தாபத்திப் பிரமாணத்தின் விதியை அளவை நூலுடையார் "அடுத்துலகோதும் பொருள ருத்தா பத்தி” என்னுந்துறையிற் கூறியிருத்தலானுங் காண்க. இதன் விதி இங்ஙனமாகவும், நண்பரொருவர் “ஒருவன் மனைவி யிரு வருள், மூத்தாள் பதிவிரதையென்றால் இளையாள் வியபி சாரியென்பதெப்படி?” என்று கடாவெழுப்பி, ‘பகலுண் ணான் அருத்தாபத்திப் பிரமா

சாத்தன் பருத்திருப்பன் என

ணத்துக்குத் தருக்க சங்கிரகவுரையில் தந்திருந்த உதாரணத்தை எடுத்துப் போட்டுக் போட்டுக் கொண்டு கொண்டு சாத்தன் இரவுண்பன், பகலுண்ணானாயும் பருத்திருத்தலின் என்று கருதலளவையான் அறியுமாப் போல, இளையாள் வியபிசாரி யென்ப தறிதற் கறிகுறியொன்று மின்மையால் அங்ஙனங் கூறப்படா தென்றும், இளையாள் பதிவிரதையாகவுமிருக்கலாம், அப்படியல்லாமலு மிருக்கலாம் அவளைப் பற்றிப் பிரஸ்தாபம் இல்லை, ஈண்டுப் பிரஸ்தாபிக்க வந்தது மூத்தாளையே யென்றுங் கூறியிருப்பதாகத் தெரிய வருகின்றது. தருக்க சங்கிரகவுரையில் அவ்வுதாரணம் வந்த சமயந்தெரியாது வீண்பிரசினை செய்தது தம்மதத்திலெழுந்த துரபிமான புத்தியினாலும் பிற மதத்தின் மேலெழுந்த துவேஷ புத்தியினாலும் அவருக்கு உண்மை தோன்றாமற் போனதை இனிது விளக்குகின்றது. ஆண்டுக் கூறவந்ததெல்லாம் இது: தருக்கசங்கிரகம் சுருக்க நூலாதலின் அது தான் கூறும் விஷயங்களையும் முதல் நூலில் கூறப்பட்ட விஷயங்களையும் சுருக்கிப் பேசவே கருதிற்று. அது சுருங்கச் சொல்லல் என்னும் அழகும், அவ்வழகாற் பெரிய விடயங்களும் தெளிவாய் விளங்குதலால் விளங்க வைத்த லென்னும் அழகுமாம். அது காண்டல் கருதல், ஒப்பு, உரையென நான்களவைவகுத்து, அவ்வகுத்தவற்றுள் முதல் நூலிற் கூறப்பட்ட ஏனையளவை களையும் அடக்கப் பார்க்கும். அதனால், அருத்தாபத்தியும் சிறுபான்மை அனுமானப் பிரமாணத்துள் அடங்குதல் பற்றி அதையவ்வாறே யடக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/145&oldid=1590189" இலிருந்து மீள்விக்கப்பட்டது