உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

முற்றும் அருத்தாபத்திப் பிரமாணம்

113

அனுமானப்

பிரமாணத்துள் அடங்காதாம். முற்றுமே யடங்குமாயின், அருத்தாபத்தியெனப் பெயர் வேறு கொடுத் தொன்று காட்டல் ‘நின்று பயனின்மை' என்னுங் குற்றமாம். அது கூறிய முதல் நூல்களும் மிகைபடக் கூறலென்னுங் குற்றத்திற்கிலக்காம். ஆதலால், ஒவ்வோர் இயைபு பற்றியும் சிறுபான்மை தான் கூறிய பிரமாணங்களுள் அவை அடங்குதல்பற்றியும் தருக்கசங்கிரகம் அவற்றை அடக்கின மையை அதனுரை தெரிவித்து அதற்கியைந்த உதாரணங் களையும் காட்டிற்று. ஆகவே, அருத்தாபத்திப் பிரமாணம் முற்றும் அனுமானத்துள் அடங்குமாறில்லை; அதற்கு தாரணமாம் 'அறஞ்செய்தான் துறக்கம் புகும்' என்பதும், பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான்' என்பது போல் அனுமானப் பிரமாணத்துள் அடங்காதாம். அதவா, அனுமானிக்கினும் சொல்லுவான் கருத்து வகையாலும் அதன் வழித்தான் அவன் சொல்வகையானுமே தெளியப் படுமென்பது. அதுபோல மூத்தாள் பதிவிரதை யென்பதுங் கொள்ளப்படும் என்றால், ளையாள் வியபிசாரி' என்பதும் பெறப்படுமென்க.

இளையால் வியபிசாரியோ அல்லது பதிவிரதையோ அதைப் பற்றிய பிரஸ்தாபமில்லை என்பதைச் சற்றுப் பரிசோதிப்பாம். ஒருவனது பொருளாகிய மனைவிய ரிருவரில், பேசுகிறவன் மூத்தாளாகிய இலக்கியப் பொருளை யெடுத்துக் கொண்டு அதன் பாலுறும் இலக்கணமாகிய பதிவிரதைத் தன்மையை வரைந்து பேசும் போது, அவ்விலக் கணம் இளையாள் பாலுஞ் செல்லுமாறு பேசினானாயின் அதி வியாததி யென்னுங் குற்றமாம்; அல்லது, இருவரது இலக்கணங்களும் தெரிந்திருந்தே மூத்தாட்கு மட்டும் அவ்விலக் கணத்தை வரைந்து கூறினானாயின், இருபொருட் குப் பொது வாவ தொருபண்பை ஒன்றற்கே சிறப்புறக் கூறுதல் குற்றமாம். ஆதலால் இருவர் இலக்கணங்களும் மாறுபட்டிருந்தமை கண்ட ஒருவன், அவர்களது கணவற்கு அவற்றைத் தெரிவிக்க வேண்டி மூத்தாள் பாலுள்ள இலக்கணத்தை மட்டுங்கூறி, அவ்விலக் கணம்

ளையாள் பாலில்லாமையைக் குறிப்பாலுணர்த்தி அவ்விலக்கணத்தை மூத்தாட்கு மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/146&oldid=1590191" இலிருந்து மீள்விக்கப்பட்டது