உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 26

வரைந்து கொண்டு நின்று விட்டான். அதையறிபவன் அருத்தாபத்திப் பிரமாணத் தாலறிதற் பாலனாமென்க. மனைவியரில் மூத்தாளிலக்கணம் கூறுவோன், இளையாளில் க்கணந் தெரியானாயின் தரியானாயின் அறிப வன் அருத்தாபத்திப்

பிரமாணத்தா லறியாதிருத்தற் பொருட்டு இளையாளிலக்கண மெனக்குத் தெரியாது என்றுஅடை கொடுக்கற்பாலனென்பது. இது அன்னம் பட்டியத்தினுங் காண்க; "குறித்தோன் கூற்றந் தெரித்து மொழி கிளவி” என்றார் தொல்காப்பியனாரும். ஒரு பொருள் வேறுபாடு குறித்தோன் அது ஆற்றன் முதலியவற்றால் விளங்காதாயின், அதனைத் தெரித்துச் சொல்லுக என்பதே யதன்பொருளாம். அன்றியும், தருமஞ் செய்தான் சுவர்க்கம்பு குவான் என்றால், பாவஞ் செய்தான் சுவர்க்கம் புகலாம் அல்லது புகாதிருக்கலா மென்று கொள்ளப்படலா மென்பார் போலும் நமதன்பர்; நிற்க.

கிடந்த

எதிரியினது காரணகாரிய அழிவுபாடு

ஸ்ரீநாயகரவர்கள் எழுதிய சைவ சித்தாந்தத்தில் பொதிந்து உண்மைப்பகுதிகளையும், ஏனைச் ச சமயிகள் அறிவுதிரிந்து கூறும் புரைபட்டுக் கீழ்மையுறும் பகுதிகளையும் தினகரன் என்னு மெமதரிய நண்பர் கூர்த்த அறிவுடைய சித்தாந்தசைவர் உணர்ந்து பேறுபெறுமாறு விரித்துத் தீட்டிவந்த விடயங்களின் திறமறிந்து நன்னெறிச் செல்லும் ஊழின்றி, அவை புரைபட்டன வாகத் தமது திரிவெய்திய அறிவிற்கண்டு, தொன்னூல்கட்கு முரணுறு மாறு அவற்றை மறுப்பார்போன்று சில பலவரிகள் எழுதிச் சிறுமியர் மணற்சோறட்டுண்டு தம்மிலே தேக்கிக் களிக்குமாறுபோலக் களிப்பெய்தி நின்றன ரொரு மாயாவாதி. தமிழிலுள்ள சிறந்த காவியங்களையும் லக்க ணங்களையும், மெய்கண்ட சாத்திரங்களின் அருங்கருத் தையும் படித்தறிந்து தெளிதலில்லாத அந்நண்பர் எழுதிய வற்றை யொரு பொருட் படுத்தி யான்றோர் ஒருவரும் இது காறுங் கண்டித்திலர் எனினும், மந்த அறிவுடையார் இந்நண்பரது போலிக் கூற்று களைக்கேட்டு மயங்காமைப் பொருட்டு, ஈண்டுச்சில யாம் வரைந்து காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/147&oldid=1590192" இலிருந்து மீள்விக்கப்பட்டது