உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

115

இந்நண்பரது அருத்தாபத்திப் பிரமாண விசாரத்தை மேலே துவைத்தாம். இனி மற்றப்பகுதி வருமாறு:

ஸ்ரீநாயகரவர்கள் பஞ்சபூதம் ஒன்றிலொன்றொடுங்கு முறைமைக்கும், அவை வெளிப்படு முறைமைக்கும் தெளிவு பெற எடுத்துக் காட்டிய பாத்திரவுவமானத்திற் குற்றங் காணவந்து “ஒரு பாத்திரம் மற்றொரு பாத்திரத்தை விட்டு வெளிவந்த பிறகு இவ்விரண்டு பாத்திரங்கட்கும் சையோகாதி மற்றெந்தச் சம்பந்தமுமில்லாதிருக்கும் அங்ஙனம் பஞ்சபூதங்களிருக்கக் காண்கிலோம்” என்று நண்பர் வரைந்தார். பஞ்சபூதத்தின் ஒடுக்கத் தோற்றத்தொழின் மாத்திரைக்கு எடுத்துக்காட்டிய பாத்திரவுவமை யுத்தியில் அவற்றின் (பஞ்சபூதத்தின்) இருத்தற் றொழிக்கும் இயைபு காணவந்து ஆவிரம்பூப் பொன்னோ டொக்குமென்றால் அது பொன்போல் அடித்து நீட்டவருமோ என்று வினாவுவாரோ டிந்நண்பரும் இனப்பட்டு இழுக்குற்றார். பொருட்கும் உவமைக்கும் உள்ள இயைபுகள் காணவல்ல அத்துணைப்பயிற்சி தானு மிவர்க்கில்லை கொலாம். பொருட்கு உவமை எடுத்துக் காட்டுவார் குறிப்பொடு பட்டன்றே அவ்விரண்டற்கும் உள்ள இயைவு கோடற் பாலது? அவ்வாறின்றி நண்பர் கருத்துப்படியெல்லாம் இயைபுகள் காணப்படவேண்டும் போலும்? அது கிடக்க, நண்பர் கருத்துப் படியே பார்க்கினும் ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லை, என்னை? ஸ்ரீநாயகரவர்கள் கூறியவற்றில் “பெரிய பாத்திரத்தில் சிறிய பாத்திரங்கள் அடங்கி யிருப்பதும் அவை ஒன்றிலிருந்து வெளிவருவதுமாகிய நிதரிசனமே யீண்டமைதியாயதென்க” எனப் போந்த தொடரில் வெளிவருவதும் என்ற இரு சொல்லும் என்னை வாட்டந்திருத்துவதே” என்ற திருக்கோவையாரிற் போல ஒரு சான் னீர்மைத் தாய்நின்று கட்பொறிக்குப் புலனாவதும் என்று பொருள் கோடுமாயினென்பது; புறம்பே படின் என்று கோடுமாயினன்றே நண்பரது இழுக்கிய கருத்துப் படி வழுவாவது? முறையே சிறியவும் பெரியவுமாய பாத்திரங் கள் பலவற்றைப் பொதிந்து கொண்ட ஒரு பெரும்பாத்திரம் வாயில் மூடப்பெற்றிருந்த நிலைமை ஆகாயமொழிந்த நான்குபூதங்களும் அதனுள் ஒடுங்கியிருந்த முறைமைக்கும் அப் பாத்திரத்தின் மூடி நீக்கப்பட்டு அது ஏனையவற்றைத் தன்னுட்

66

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/148&oldid=1590193" இலிருந்து மீள்விக்கப்பட்டது