உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் - 26

செறித்து கொண்டு கட்பொறிக்கு விடயமாகு நிலைமை ஒன்றைவிட்டொன்று பிரிவுறாது தோன்றும். ஐம்பெரும் பூதங்களின் கிடைக்கைக்கும் ஒப்பாயவாறு தேர்ந்துணரவல்ல நுண்ணறிவாளர்க்கு நாயகரவர்கள் எழுதிய அரிய தொடரி னுண்மை இனிது விளங்கும். அவ்வாறன்றி உண்மைப் பகுதி களிலும் குற்றங்காணத் துரபிமானம் கடைப்பிடித்தொழுகும் நண்பர் போல்வார்க்கு அவர் மதத்தில் விசேடித்துவழங்கும் கயிற்றரவு, இப்பி வெள்ளி, பேய்த்தேர்போல அவ்வுண்மைப் பகுதியும் பொய்மையாகக் காட்டிற்றோ? அதுவன்றி அம்மதத் தினர்க்கு “நிலத்தியல்பால் நீர்திரிந்த” வாறுபோலத் தாங்கள் பயிலும் நூற்பழக்கத்தால் திரிவு கொண்டு எல்லாவற்றையும் பொய் (முக்காலத்தும் இல்லை) என்று கண்ட அவர் கருத்து அங்ஙனம் காட்டிற்றோ? நிற்க.

பிரமமே உலகமாகத் திரிந்தது என்னும் தமது வழுக்கு ரையை நிலைநிறுத்தற் பொருட்டு எடுத்த ஆகாய உபமானத்தை ஆதரிக்க இந்துவென்பவர் காட்டிய பஞ்சு திட்டாந்தம் பொருந்தாமையான் நாயகரவர்கள் “நூலைப் பிச்சுப் பார்த்த போதும் அவை பஞ்சாலாக்கப் பட்டவை யென்று சிறு குழந்தையும் அறிந்து சொல்லும். இவற்றோடு எங்ஙனோ ஆகாயாதி பொருந்தும்?" என்று மறுத்ததைப் போலி மருட்டால் மாற்றவந்து இந்நண்பர் “ஆகாயத்தின் றன்மை சப்தம்; ஆதலின். எங்கெங்கு ஆகாயமுளதோ அங்கங்குச் சப்தமுள்ளது. வாயு வாதி பூதங்களில் ஆகாய முளது ஆகலின் வாயுவாதி பூதங்களில் சப்தமுளது ஆகலின் எப்படிப் பஞ்சிலுள்ள தன்மையே நூலிலும் வஸ்திரத்திலு முண்டோ, அப்படியே ஆகாயத்தின் தன்மை ஏனைய பூதங்களிலுமுண்டு. நாயகரவர்கள் அபேக்ஷித்த படியே ஆகாசாதிகளின் றன்மை வாயுவாதிகளி லிருக்கக் கண்ட ாம். இப்போதாவது காரணகாரிய சம்பந்தம் பூதங்களில் ஒப்புவார்களோ? ஒப்பார்களோ?" என்று மிக இரங்கிக் கூறுகின்றார். இவரது புலமையை என்னென்பாம்? காரணப் பொருளிற் கிடக்குந்தன்மை காரியப் பொருளினும் இருத்தற் பாலது. காரணப்பொருளிற் கிடந்திலவாய பண்புகள் பண்புகள் காரியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/149&oldid=1590194" இலிருந்து மீள்விக்கப்பட்டது