உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

117

பொருளிற் காணலுறுமேயெனின், அவை பிற காரணப் பொருளின் சேர்க்கையால் உண்டாயின வென்பதும் தெற் றெனத் துணியப்படுமன்றே? எவ்வாறெனில்? வெண்பஞ்சியா னாய நூலின் வெண்டன்மையும், அந்நூலின் உருவத்தைச் சிதைப்புழிக் காரணப் பொருளாம் பஞ்சின்றன் மையுமே காணலுறுவதன்றிப் பிறகாரணப் பொருளின் றன்மை இறைத் துணையுங் காணப்படுமாறில்லை. அவ்வாறன்றி, வெண்பஞ்சி யானாய நூலிற் செம்மை நிறம் காணப்படுமாயின், அச் செம்மை நிறத்தைத் தரும்பொருள் வெண் பஞ்சின் வேறாகப் பிறிதொன்றுண்டெனவேபடும். படவே, வெண்பஞ்சியானாய நூலிற் செம்மைநிறங் காணப்படுவது கொண்டு அந்நூல் வெண்பஞ்சியானாய தென்றாகாமல், செம்மைநிறந்தரும் பொருளின் காரியம் என்று கோடல் பொருந்து மாறியாங்ஙனம்? அது போலவே உளருந்தன்மைத் தாய் வளியினிடத்து ஆகாயத்தின் பண்பாம் ஓசை தோன்று மாயின், அது ஆகாயத்தின் சேர்க்கையானாய தென்று கோடலன்றி, ஆகாயத்தின் காரியமே வாயுவென்று கோடலி யாங்ஙனம்? வாயு ஒரு பொருள். ஆகாயம் பிறிதொரு பொருள். இங்ஙனம் வெவ்வேறு பெற்றியவாயபூதங்களுள் வாயுவில் ஆகாயம் புணருங்கால் தன்னரைக்கூற்றிற் காற் பாகமே அதிற்கலக்கு மென்பதூஉம் அவ்வாறு கலந்துழியும் ஆகாயத்தின் காரியம் வாயுவாகாதென்பதூஉம் தன்பதூஉம் பஞ்சீகரண முறைமை யுணர வல்லார்க்கு இனிது விளங்குமென்பது.

இனிக் காரியமாய நூலாதியைப் பிச்சுப் பார்த்த போது காரணமாய பஞ்சாகவே முடிந்தபடி, காரியமாய வாயுவாதி களைப் பிச்சுப் பார்த்த பொழுது, காரணமாய ஆகாசமாக ல்லையே' என்று திருத்தமுற நாயகரவர்கள் வரைந்த பகுதியை, நண்பர் தமது குழறுபாட்டுரையான் மறுக்கவந்து “அங்ஙனமாக இப்போது ஒவ்வொரு பூதமாக வெடுத்துப் பிச்சுப் பார்க்குமளவில் ஒவ்வொன்றும் துவியணுகம், திரியணுகம், சதுரணுகங்களாகப் பிரியும். அவை களை மறித்தும் பிரிக்க (கையினாற் பிரிக்கக்கூடாதாயின், மனத்தினாலங்ஙனம் செய்யலாம்) ஆதீந்திரிய அணுக்களாய் முன்கூறியவாயுவோ

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/150&oldid=1590195" இலிருந்து மீள்விக்கப்பட்டது