உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் - 26

டொப்ப ஆகாயரூபமாகு மல்லவா? அங்ஙனமாயின் காரியமாய நூலாதிகள் காரணமாய பஞ்சானது போல் காரியமாயவாயு வாதிகள் காரணமான ஆகாயமாயது பொருத்தமுடைத்தே” என்றோர் வழுக்குரை யெழுதிக் களித்துச் செருக்கினார். உலகியற்பொருளெல்லாம் அரு உருவென இருபிரிவுடையன வாய் மறித்தும் கலப்புப் பொருளெனவும் தனிப் பொருளெனவும் இருவேறு வகுப்புடை யனவாய் இ இயலும். ங்ஙனமாக நான்கு குப்புக்குட்பட்ட பொருள்களனைத்தும் வெவ்வேறு பெற்றியவாய அணுக்கூட்டக்கிழமையானாயதாதலின், அவற்றுள் உருவப் பொருளின் அணுக்குழாம் பிரிக்கப் பட்டுழி அவை யருவத்தன்மை பெறுதலே கண்கூடாக அறியக் கிடக்கின்றது. பொருள்கள் பகுக்கப்படுங்கால் தனிப்பொருள் ஒருதன்மைத்தாய பல அணுக்களாலும் கலப்புப் பொருள் பல தன்மையவாய பல அனுக்களாலும் அமைக்கப்பட்ட வாகலான், அவை பகுக்கப்பட்டுழியும் அவ்வாறே பிரிவனவாம்.

பிரிந்துழியும் ஓரணு தன்றன்மை திரிந்து மற்றோணுவாகவாதல் ஓரணுச்சாதி தன்றன்மை திருந்து மற்றோரணுச் சாதியாகவாதல் திரிதலில்லை யென்பது பொருட்டிறநூல் (Physics) நாற்பூத விளக்கம் (Chemistry) ஆதிய அரிய நூல்களாலும் மெய்கண்ட நூல்களாலும் இனிது புலப்படும். எவ்வாறெனின்? ஒரு பசும் பொற்கட்டி தனிப் பொருளாதலின் அதைப் பல அணுக்களாகச் சிதைத்து, ஒரு கலத்திட்டு (in a glass vessel) அவை புறம்பே போகாவண்ணம் ஓம்பிப்பார்ப்புழி அவை கட்பொறிக்குப் புலனாகாமை தெள்ளிதிற்புலப்படும். மறித்தும் அப்பாத்திரத் தோடு எரிதழல்கூடியவழி யவ் வணுக்கள் ஒருங்குசேர்ந்து முதலிற்கண்ட பசும்பொற் கட்டி யாயே காணப்படும். இதனால், உருவத்தனிப்பொருள் அணுக்க ளாகப் பிரிக்கப்பட்டுழி அருவத்தன்மையுற்றும் தன்றன்மை அணுக்களைவிட்டுப் பிரியாததாய் அவ் வணுக்கள் தனிப் பொருளணுவாற்றலால் (Cohesion) கூடியவிடத்து முன்னைய உருவப்பொருளாயே தோன்று மென்பதூஉம், ஓர் உருவத்தனிப் பொருள் அருவத் தன்மை யெய்தி மறித்தும் உருவமாகச் சமைந்துழிப் பிறிதோர் தன்மைப் பொருளாகாது முன்னைய தன்மைப் பொருளாகவே யமையுமென்பதூஉம், இயல்பில் பழமையாகவே நிலைபெறும். எவ்வெப் பொருளும் உருவம் வேறுபட்டு ழியும் அருவமடைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/151&oldid=1590196" இலிருந்து மீள்விக்கப்பட்டது