உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

119

துழியும் தன்றன்மையிற்சிறிதும் வேறுபடுதவில்லையென்பதூஉம் திண்மைபெறக் கிடைக்கப் பெற்றதன்றே? இது போலவே நீர் என்னும் கலப்புப் பொருளும் நூல்வழியே பிரிக்கப்படுமிடத்து இருவேறு நீர் வாயுக்களாகப் பிரிந்து மீண்டும் அவ்வாயுக்கள் புணர்க்கப் படுங்கால் நீர் என்னும் கலப்புப்பொருள் அமைவதூஉம், நீ ரென்னும் கலப்புப் பொருளை உண்டாக்குதற் கிழமைத்தாய அணுக்கள் தன்றன்மை திரிவெய்தி வேறுதன்மை யுடைய ஒரு பொருளாக அமைத லில்லை யென்பதூஉம், அவ்வாறு அமைத்துக் கோடற்கு நண்பர்போன்ற எத்துணை மாயா வாதிகள் எத்துணைமாயம் புரியினும் அவை கடைபோகா வென்பதூஉம், இனிதுபெறக் கிடந்ததன்றே? இவ்வாறே மண்- புனல்-அனல் என்னும் உருவப் பொருளெல்லாம் அணுக் களாகப் பிரிந்துழி உருவழிந்துகட் பொறிக்குப் புலனாகா. அத்துணையேயன்றி, ஆகாயத்தின் றன்மை யெய்துதலாதல், ஆகாயமாகத் திரிதலாதல் இயல்பில மைந்த விதிக்கு முரணுறுமாதலால், அங்ஙனங்கூறுவார் சொல் லன்றி அப்பொருள்கள் அவ்வாறாகாமை யினிது பெறப்பட்டு, இது போலவே வாயுவின்றன்மையும் திரிவெய்துமாறில்லை யென்பதும் பெறப்பட்டு நண்பர் எடுத்துரைத்த மறுப்புகளும், கொள்கைகளும் அவரையே மயற்கடற்குளமிழ்த்தி நாயகரவர் களது அருங்கொள்கை களைத் தாங்குத் திண்ணிய கோடாயி னமைகண்டு யாம் செருக்குற்றனம். என்னையெனில்? காரியப் பொருளாம் நூலைச்சிதைக்கப் பஞ்சுபெற்றவாறு போல் ஆகாயத்தின் காரியமென்று நண்பர் குமுறியுரைத்த

பிருதிவியாதிகள் ஒடுங்குமுறைமையில் ஆகாயமாகிய காரணப்பொருளாகத் திரிதலில்லையென்பது பெறப்பட்ட மையினென்க. தருக்க நூலாரும், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமாதிகளைத் தனித்திரவியங்களென்றும் அவ்வொவ் வொன்றின் றன்மை களையும் தனித்தனியே எடுத்து விதந்து ரைத்து ஒன்றன்பண்பு பிறிதொன்றிற் காணலுறின் அதன் சையோகத்தால் பிறி தொன்றிற்கும் அப்பண்பெய்திற்றென்று அதிவியாத்திக் குற்றம் படாது விலக்கி, உதாரணமாகத் தண்ணென்றது சிலாதலம் என்புழித் தட்பந்தோன்றுதல் நீரின் சம்பந்தத்தா லாகலின், ஆண்டு அதிவியாத்தியின்மையுமுணர்க, என்றும் விரித்துத் தெளிவுபெற விளக்குபவாகவும், நண்பர் அவற்றை யெல்லாம் தினையளவும் ஆராய்ச்சி செய்திலராய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/152&oldid=1590197" இலிருந்து மீள்விக்கப்பட்டது