உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

121

அது தமக்கே ஒரு பெருங்கேடு விளைக்குமென்று கருதிப் போலும் நண்பர் ஜாதியென்பது இன்னதகைத்து என்று விளக்கிலராய் மேற் குறிக்கப்பட்ட பகுதியெழுதியது? நிற்க.

L

ஒரு குணமாதல் பலகுணமாதல் பொருந்திய ஒரு பொருட்கூட்டமே ஜாதியென்னும் பெயர்த்தாம். என்னை பெறுமாறெனின்? ஒரு வணிகர்கடையில் பலபொற்கட்டிகள் பகுப்புகளாக இருக்கக்கண்டு அவற்றுள் ஒரு பகுதியை விலை கோடற்குப் போவார் அவ்வணிகர் பெருந்தகையை விளித்து ஐய! நல்ல ஜாதிப் பொற்கட்டிப் பகுதி எமக் கொன்று தருகவென வினவி அவ்வாறேபெற்று ஒவ்வொரு கட்டியையும் உரைகல்லில் உரைத்து அப்பகுதிக் கட்டிகளனைத்தும் ஒரு மாற்றாக விருக்கில் அதற்குரியவிலை கைக் கொடுத்துப் போவதைப் பார்த்துச் ஜாதியினிலக்கணம் அறியவிரும்புஞ் சிறுவனொருவன் அதை யினிது தெளிந்து கொள்ளுமன்றே; போலவென்பது. இதுவே, ஆசிரியர் சிவஞான

இது

யோகிகட்குங் கருத்தால் “ஜாதி யாவது ஒரு நிகரனவாகிய பலபொருட்குப் பொதுவாவதோர் தன்மை" என்று சித்தியார் அளவை யிலக்க ணத்தில் வரைந்தமை யானுணர்க. நண்பர் ஒரு ஜாதியைக்கூறும் பஞ்சபூதங்களில் இவ்விலக்கணக்கிடக்கை அறிவுக்கு இனிது போதருமாறு புலப்படுகின்றதா? என்பதைச் சிறிது ஆராய்வாம். பஞ்ச பூதங்களும் ஆகாயச் சாதியயெனின், அதன் (ஆகாயத்தின்) சிறப்புக்குணம் ஓசை யொன்றுமே யவ்வைந்தினு மிருத்தற் பாலது, அஃதன்றிப் பிறகுணங்களுங் காணப்படின் அவை வெவ்வேறு சாதியவென்பதே துணிபாம். அற்றன்று; துத்த குணமுடைய ஆகாயமொன்றே வாயுவாகத் திரிந்து பரிசமும், தேயுவாகத் திரிந்து உருவமும், அப்புவாகத்திரிந்து சுவையும் பிருதிவியாகத் திரிந்து நாற்றமும்எய்தி ஏனைய குணங்களோடு நிகழுமென்றா லென்னையெனின்; அறியாது கடாயினாய். காரணமாய் ஆகாயமொன்றே காரிய பூதங்கள் ஏனை நான்குமாகத் திரிந்ததென்னின், காரணத்தில் இலவாய குணங்கள் காரியத்திற் புதிதாகத் தோன்றுதல் யாண்டு மின்மையானும், இதுபற்றியே தெய்வீகச் சுருதிகளும் "தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத் தலின்” என்றும் இல்லதற்குத் தோற்றமின்மையின்“

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/154&oldid=1590200" இலிருந்து மீள்விக்கப்பட்டது