உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

122

மறைமலையம் - 26

என்றும் அருளிய வாகலானும், ஆங்கிலேய நூலாரும் பொருட்டிற நூலில் (Physics) நமக்குத் தெரிந்த வளவில், இல்பொருளினின் றும் ஓரணுவைச் சிருட்டிக்கவாதல், உள் பொருளை இல்பொரு ளாகத் திரிவுபடுத்தவாதல் வல்லதொரு தன்மைப் பொரு ளில்லை யென்னும் பொருள்பட (By no power known to us can the smallest particle of matter be either created out of nothing or reduced to nothing) என்று கூறுபவாகலானும் அது பொருந்துமாறு யாங்ஙன? மென்பதாம். அவ்வப்பண்பு களை யுந் தந்து கொண்டிருக்கும் தனித்தனி வெவ்வேறு பூதங்கள் உளவென்பதே தேற்றமாம். ஒரு பூதத்தின் உதவி னைய பூதங்கட்கும் வேண்டியிருத்தலான்* பிறவா யாக்கைப் பெரியோன் சங்கற்ப மாத்திரையானே, அவைகட்குச் சையோகம் பிறந்தமையை நண்பர்தம் போலி மதத்திற்குச் சார்பாகக் காரணகாரியமாக்க வந்து மிக நலிந்து அவற்றை யிடர்ப் படுத்தியும் அவற்றால் அவை போழப்படாவாறு அவற்றினி யற்கை வைரக்குப்பாயம் அவைகட்குப் பூட்டப் பட்டவாறுணர்க. இப்பூதங்கள் ஒன்றிலொன்று காணலுறுவது சையோக மாத்திரையே யன்றிக் காரணகாரியமாக வன்றென்பதை நண்பர் உரையைக் கொண்டே விளக்கிக் காட்டுவாம். “ஆங்கிலேய சாஸ்திரிகளும் 4--டிகிரி உஷ்ணம் அப்புவிலுண் டென்று கண்டார்கள்” என்றும் “கொதிக்கும் ஜலத்தைப் பனிக்கட்டி செய்யும் எந்திரத்திலூற்றி அவ்வெந்திரத்தையிக்க ஜலத்திலுள்ள உஷ்ணவன்மை குறைந்து கொண்டே வந்து ஓர் நிலையில் தண்ணீராகி அது குளிர்ந்து கட்டியாகும். இக் கட்டியோ தன்னிடமிருந்த உஷ்ணமெல்லாம் பறி கொடுத்து, வெளுத்த அப்புவாம்” என்றும் நண்பர் வரைந்தார்.தேயு வென்னுங் காரணப்பொருள் அப்புவென்னுங் காரியப் பொருளாங்கால் தேயுவின் பண்பாம் வெம்மை அப்புவுக்கும் பண்பாய் அமைதற்பாலது; பொற்பணிபோல, அவ்வாற மைந்துழி அப்பு குணியும், அதன்வெம்மை குணமுமாம். குணியழிந்துழிக் குணமழியும் குணமழிந்துழிக் குணியழியும். ஒன்றைவிட் டொன்று பிரிந்திராவாகலா னென்பது; ஆனால், நண்பருரைப்படி தண்ணீரில் இருந்த வெம்மையெல்லாம் அது பனிக்கட்டியாகப் பரிணமித்துழிக்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/155&oldid=1590201" இலிருந்து மீள்விக்கப்பட்டது