உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

123

கெட்டொழிந்தது. ஒழியக் குணமாகிய வெம்மையின்றிக் குணிப் பாருளாம் அப்புத் தனித்திருந்தது போலும்? நன்று! நன்று!! வர் அறிவின் கூர்மையிருந்தவாறு, குண குணமொழியவும் குணிநிலை பெறுதற்கு அரியவிதி நண்பர் தான் கற்ற குதர்க்கநூலிற் பெற்றார்கொல்? நிற்க, அப்பு தேயுவின் காரியமாயிருந்துழித் தன்றன்மையாகிய வெம்மையைப் பிரிந்திராதுடனே தானுமழிவுற்றிருக்கும். அங்ஙனமின்றி வெம்மைப்பண்பு தன்னை விட்டொழியவும் தான் அழிவுறா திருந்தமையான் அது தேயுவின் காரியமன் றென்பதூஉம் தனதுநெகிழ்ச்சிக் குணத்திற்கு ஒருதலையாக இன்றியமையா அசமவாயி காரணமாய் வேண்டப் படுதலான் இறைவனது சங்கற்ப மாத்திரையானே தன்னொடு தேயுவின் சையோகத்தைப் பெற்றதென்பதூஉம் இனிது பெறக்கிடந்த வாறுணர்க.

இப்பகுதியால், நாயகரவர்கள் எம்மீது (சித்தாந்த சைவர்கள் மீது) பெருங்கருணையால் தெளிவுறத் தீட்டி வந்த, பூதங்களின் காரணகாரியத்தைப் பஞ்சுதிட்டாந்த அழிவி னால் மறுத்தொழித்தபகுதி நியாயவலியுடைத் தென்பதூஉம், பூதங்களொன்றோடொன்று விஜாதி பேதமுற்றன வென்ப தன்றிறம் தருக்கவியைபுடைத்தென்பதூஉம் இனிது விளக்கி

வற்புறுத்தப்பட்டது.

66

பூதங்கள் ஒன்றோடொன்று விஜாதிபேத முள்ளன வென்று நாயகரவர்கள் ஆழியகருத்தொடு வரைந்ததன் உண்மையுணராது பூர்வபட்சி பூர்வபட்சி தன் மிதந்த அறிவான் ஆராய்ச்சிசெய் தெழுதியவை பொருத்தமுடைய வல்ல வன்பதைக் காட்டி மறுத்தொழித்தாம். ஜ னி 'ஒன்றி லொன்று பகைமை கொண்டவைகள்” என்ற தொடரின் மேல் நண்பர் எழுப்பிய தடைகளின் உரத்தையும் நண்பர் உரத்தையும் ஐம்மை வடிவுடைய எமது கூரிய வேலாற் போழ்ந்தெறிவாம். நாயக ரவர்கள் மேற்காட்டிய தொடரி னுள்ள பகைமை என்ற சொற்கு நண்பர் ஒன்றையொன்றழிக்குந் தன்மை எனப் பொருள் காண்டு குமுறினார். நண்பர் ஆன்றோர் இலக்கியங்களிலும் காவியங்களிலும் ஏனைய பிரபந்தங்களிலும் நன்கு பயின்றில ரென்பதும், தருக்க நூலையும் ஒழுங்குற ஆராய்ச்சி செய்தில ரென்பதும் இதனால் இனிது புலப்படுகின்றது. இலக்கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/156&oldid=1590202" இலிருந்து மீள்விக்கப்பட்டது