உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

நூலால்

மறைமலையம் - 26

வினை வேறுபடூஉம் பலபொரு ளொருசொல், வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந், தேறத் தோன்றும் பொருடெரிநிலையே” என்றும், தருக்க நூலார் இயல் பளவை யென்றும் தெரித்தவற்றை யாராயாது "பகைமை" என்பதற்கு ஈண்டைக் கேலாப்பொருள் செய்து நண்பர் எமது நியாயசஸ்திரத்திற்கு இலக்காயினார். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றில் ஒன்றையொன்றழிக்குந் தன்மை காணப் பெறாமையால், நாயகரவர்கள் எடுத்தாண்ட பகைமை' எனுஞ் சொற்கு அது பொருளன்மையும், நாயகரவர்கட்கு அவ்வாறு கூறுதல் கருத்தன்மையும் பெறுதும். ஈண்டுப் ‘பகைமை' என்பதற்கு 'மாறுபாடு' எனப் பொருள் கோடலே சிறப்புடைத் தாம்; என்றால் ஒரு பூதத்திற்குரிய குணம் பிறிதொரு பூதத்திற்கும் உரித்தாகாது, அதனில் வேறுபட்ட குணத்தை யுரித்தாகக் கொள்ளும் என்பதே நாயகரவர்கள் கருத்தென்று இனிது கண்டாம். ஆகவே, ஐம்பெரும் பூதங்களும் ஒரு பண்புடைய வாகாது வேறுபல பண்புகளையுடைய பண்பி களாய் நிலை பெறுவனவாம். சுவையின்வேறுஒளி; ஒளியின் வேறுஊறு; ஊறின் வேறு ஓசை; ஓசையின்வேறு நாற்றம் என்பதாம். இவ்வேறு பாட்டையே பகைமை யென்றதாம். இவ்வருங் கருத்துற வரைந்த தொடர்க்குப் பொருள்காணும் அத்துணை மதுகைதானுமின்றி நண்பர் “பிருதிவிக்குக்குணம் சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம். இக்குணங்களில் எவைஎவை பகை யுடையன?” “ஆகாசாதி பூதங்களின் குணங்களைவிட வாயு வாதிய பூதங்களில் அதிக குணமிருக்கக் காண்கின்றோம். து காரணகாரிய சம்பந்தமுடைய பொருட்கட்கு அமையும் து ஓரிலக்கணமாம்" என்று வாளாவரைந்து செருக்கினார். ஆகாயத்தின் காரியமே பிருதிவியாயின் ஆகாயத்திலுள்ள பண்பன்றி அதிலிலவாய பண்புகள் உலக இயற்கை யமைதிக்கும் அதை நலமுற ஆராய்ந்த கிரந்தங்கட்கும் முரணாகத் தோன்றுமா றில்லையென்பதை மேலேயாம் கடாவிடைகளால் விரிவுறவரைந்து விளக்கினா மாதலின் நண்பர் “இது காரண காரிய சம்பந்தமுடைய பொருள்கட்கு அமையும் ஓரிலக்க ணமாம்” என்று வரைந்தது பொருந்தா மையுணர்க. இவரிவ் வரிய இலக்கணத்தை ஈண்டுப்பெற்றே மென்றந் நூலையுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/157&oldid=1590203" இலிருந்து மீள்விக்கப்பட்டது