உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

66

125

குறித்து விளக்கினாரில்லை. ஆதலான் அவர் கூறியது அவர் கூறிய கயிற்றரவேயாமென்க. மேல், பகைமை என்பதற்கு நண்பர் கருத்துப்படியேயும் பொருள் கொண்டு ஆனால் பகைமை தேயுவிலும் அப்புவிலு மிருக்கக் காண்கின்றோம் என்று நாயகரவர்கள் கூறலாம். அப்படித் தான் சாமானியமாய்த் தோன்றுகிறது ஆனால் உள்ளபடி அப்படியல்ல. பகையுடைய விருகுணங்கள் ஓரகத்திலிரா என்று தருக்க வாய்பாட்டிற்கு விரோதமாய்ச் சீதோஷ்ணங்களாய் இரு வியதிரேக குணங்களும் அப்புவிலி ருக்கின்றன. மேற்கூறிய தர்க்க வாய்பாட்டுடன் விரோதிக்கின்றதே யெனின்; அங்ஙனமன்று. தேயு உஷ்ணத் தோடு கூடிய அணுக்களாலாக்கப்பட்டது, அப்புவோ அவ்வுஷ் ணங்குறைந்த அணுக்களாலாக்கப்பட்டது; ஆகலின் முரணா தென்க” என்று நாயகரவர்களை மறுப்பார் போன்று வந்து தானே ஓர் ஆசங்கை யெழுப்பியதற்கு விடையுந் தானேயிறுத் தெழுதிய பகுதியைச் சிறிது ஆராய்வாம். நண்பர் தான் எடுத்தெழுதிய தருக்க வாய்பாட்டின் நுண்ணிய கருத்தறியாது பொருந்தா ஆசங்கை எழுப்பியதற்கேற்ற மாணாவிடையும் விளம்பி யிடருழப்பதைக் கண்டு கற்றோர் நகையாடுகின்றனர். பகைமையுடைய இரு பண்புகள் ஒரு பொருட்குப் பண்பாதலின் என்பதே யதன் கருத்தாம். தண்மை பண்பியாம் அப்புவுக்கு வெம்மை பண்பாயினன்றே அதனோ

ஈருங்கிருத்தல் சாலாது? அது அப்புவின் பண்பாகாது தேயுவின் பண்பா மென்றும், தேயுவின் சையோகமாத்திரை யானே அப்புவுக்கு வெம்மையுறு மென்றும் முன்னர் விளக்கினாமாதலின் எடுத்துக் காட்டிய தருக்கவாய்பாட்டிற்கு அது முரணுமாறியாண்டைய தென்ப தாம். பகைவராயினா ரிருவருள் வலியராம் ஒருவர் தன்னெ ளிய பகைவரை யடக்கிக் காண்டிருத்தல்போலத் தேயுவின் சையோகத்தானே வெம்மைமிகின் அப்புவின் தன்மை புலப்படாது அடங்கியும், அதன் வெம்மை குறையின் தண்மை புலப்பட்டு நிற்குமென்றுங் கோடலன்றித் தேயு வெம்மை மிகுந்த அணுக்களாலும் அப்பு வெம்மை குறைந்த அணுக்களாலும் அமைக்கப்பட்டனவென்று கோடல் உலக வியல்புரைக்கும் நூலாராய்ச்சியில்லார் மருங்கென்று கூறி மறுக்க அஃதாயின் நன்று; குணமழிந்துழிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/158&oldid=1590204" இலிருந்து மீள்விக்கப்பட்டது