உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

  • மறைமலையம் - 26

குணியுமழியுமென்று முன்னர்க் கூறினீராகலான், தேயுவின் சையோகத்தானே வெம்மைமிகுந்து அப்புவின் பண்பாம் தன்மையழியவும் அப்பு கேடிலாதிருந்த தெவ்வாறெனின்;- நன்றுகடாயினாய், தேயுவின் கூறாம் பசும்பொன்னின் வெம்மைப் பரிசமும். ஒளிரும் வெம்மையும் புலப்படாமை, அதனைப் பொதிந்த பிருதிவிக்கூற்றினருவமும் பரிசமும் அவற்றைத் தடுத்தலான் என்று தருக்க நூலார் தெளிவுற விளக்கியதுபோலத் தேயுவின் சையோகத்தானாம் வெம்மையும் அப்புவின்றன்மை புலப்படாது அதைத்தடுத்து நிற்குமென்று கோடுமாகலானும் தண்மையழிந்து இலதா மென்று யாண்டுங் கொண்டில மாதாலானும் அழிந்தில தாயது மறுவலுந் தோன்றாதொழியவும், ஆறவைத்தநீரில் மறித்துந் தண்மை புலப்படக் காண்டுமாகலானும் அவ்வாறு வினாதல் போலியென்றொழிக. அற்றேல் அஃதாக, ஒளியின தபாவமே இருளென்று கோடல்போல வெம்மைய தபாவமே தண்மை யென்றுகோடும் பிறவெனின்;- அற்றன்று, தண்மை பரிச வுணர்ச்சிக் கிடமாயிருத்தலானும், அபாவப் பொருட்குத் தொழிலிலதாகலானும், தருக்க நூலாரும் அதைப்பொரு ளென்றே கொள்பவாகலானும் அவ்வாறு கோடல் பொருத்த மின்றென்றொழிக. இன்னுங் குண குணியதியலை இயைபுபற்றி மேலிடத்தில் ஆங்காங்குப் பெருகவுரைத்தாம் ஆண்டுக்கண்டு கொள்க. இங்ஙனங் கூறிப் போந்த நெறி பிழைத்து மிகுந்த குறைந்த அணுக்குழுவே தீயுநீருமென்பார்க்கு நூலாதரவும் யுக்தியனுபவ முமின்றென்று கூறுக. இதனாலும் அப்பு தேயுக்கள் விஜாதி பேதமுற்றனவென்பதூஉம், அவை தம்மிலே பகைமை கொண்ட னவாமென்பதூஉம் இனிது விளக்கி வற்புறுத்தப் பட்டது. நிற்க. இனி, நண்பர் வேறொரு முகத்தானும் அப்புதேயுக்களது பகைமையை மறுக்கிறார். அதையுஞ் சிறிது ஆராய்வாம். “நாயகரவர்கள் நெருப்புநீரைப் பருகுதலானும், நீர் நெருப்பை யவித்தலானும் இவ் விரண்டும் பகைமை யுடையனவெனப் புகலலாம், இது என்றெழுதி “தீப்பற்றியெரியும் போது அதன் சுவாலையும் நெருப்பாம். தீச்சுவாலையினூடே இந்தனத்தைத் தொடாத படி நீரைப் போக்கவிடுத்தால். அந்நீர் தன்னோடு சையோகித்த

கூடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/159&oldid=1590205" இலிருந்து மீள்விக்கப்பட்டது