உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

127

ரு

தீயை யவியாமல் அதன் உஷ்ணகுணத்தை அச்சையோக வளவாகப் பெற்று மீளும். ஆகலின், அவைகள் பகையுடை யனவன்று” என்றோர் ஆசங்கையையும் பின்னர் எழுப்புகிறார். இவ்வா றெழுதி யித்துடன் நின்றிருக்கினும் நண்பருரை சிறிதுபாடு பெறும். இடையில் அறிவுதிரிந்து சிலவரிகளெழு தினமை தான் இவரை வரை இப்போதிடர்க் கடற்குளமிழ்த் துவதாயிற்று. தேயு வுக்குப் பொதுவுஞ் சிறப்புமென இரு வேறுருவுள வென்றும், அவை முறையே பூதங்களினும் இந்தனாதிகளினு மமைந்திருக்கு மென்றும், இந்தனாதிகளில் எரிவதற்கு அது இந்தனாதிகளின் ஓரளவு வெம்மையை யவாவிநிற்குமென்றும், ஆதலாற்றான் ஈரவிறகிலும் நீர் சொரியப்பட்டவிடத்தும் பற்றாது அவிந்து விடுகிறதென்றும் எழுதியிழுக்குற்றார். மேலே, நண்பர் அப்பு வெம்மை குறைந்த அணுக்களா லாக்கப்பட்ட தென்றமையால், தண்மையென்பது வேறுபிறிதன்று, வெம்மையின் குறைவே யென்பது பெற்றாம். ஆகவே ஈர விறகுங் குறைந்த வெம்மை யுடைத்தாம். வெம்மை யேற்றக் குறைச்சலாயிருக் கினும் வெம்மை வெம்மையோடு கூடுதற் கோர்தடை யின்றாம், இனம் இனத்தோடு சார்தல் மரபாதலின். அங்ஙன மாகவும் தீப்பற்று தற்கு ஓரளவு வெம்மை வேண்டுமென்பது அருங்குழவியின் குதலைச் சொல்லொன்றே கோடும். அஃதன்றியும் குறைந்த வெம்மையுடைய எளிய பொருள் அப்புமிகுந்த வெம்மை யுடையவலிய பொருளைச் (தீயைச்) சிதைக்குமாறி யாங்ஙனம்? எளியபொருள் வலிய பொருளைப் புறங்காணுமா? இவற்றை யெல்லாம் நண்பர் ஆராயாமல் பெரியாரைமறுக்க வந்தது, பிறப்பிற் பேடி செருச்செய்யச் சென்றது போலாம், அவை பகைப்பொரு ளாதலினன்றே ஒன்றையொன்று மேற்கொள்வ னவாயின. இவ்வாறெளிதிற் கொளக்கிடந்த தொன்றை நலிந்து கொண்டும் அது நிலையுதலின்றிக் கேடுறுதல், நண்பர் கட்ட குடி காநயத்துட் சிறந்தவரென்பதைக் காட்டுகிறது. பளா!! பளா!! இனித் தேயுப்பிழம்பை நீரவியாமைக்குக் காரணங் கூறுதும். தூலப்பொருள் சூக்குமப் பொருளைக் கெடுக்குமாறில்லை யென்பது தெளியப்பட்டதொன்றாம். ஐம்பெரும் பூதங் களுள் ஆகாயமும் வாயுவுமொழித்தொழிந்த பூதங்கள் மூன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/160&oldid=1590206" இலிருந்து மீள்விக்கப்பட்டது