உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் - 26

பறப்பட்ட

தூலவுருவும் சூக்குமவுருவும் என இருவேறுரு வுடையன வென்பது நண்பர் முதலானோரும் ஒப்புக் கொண்டதாம். அங்ஙனமே, இந்தனத்தில் சுடர்விட்டெரியும் பிழம்பு சூக்குமவுருவினது. அப்பிழம்பினூடே நண்பர் போகவிடச் சொன்ன அப்பு தூலவுருவினதாம். இவ்வாறு தூலவுரு வன்று அப்பு சூக்குமவுருவிற்றாய சுடர்ப்பிழம்பை யவிக்குமாறில்லை யென்பது எளிதிற் பெறக் கூடுமாக, நண்பர் தூல சூக்கும மரபறியாது மறுக்க வந்தது பிள்ளைமையேயாம். இந்தனத்தில் பொதிந்த தீயையே தூல அப்புக்கெடுக்கவற்று, அதிலுள்ள தீ தூலவுருவிற்றாகலா னென்பது. உண்மை யிவ்வாறிருத்தலின் நண்பர் இவ்விரண்டு பூதமும் பகைமை யுடையவல்லவென்று மறுத்தவுரை நிலை யுதவினறென்பதூஉம், எம் அடிகள் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் வரைந்த வுரையே என்றும் ஒளிகெழுமித் துலங்குவனவா மென்பதூஉம், நடுவு நிலைமை யொடு நோக்குவார்க்கு இனிது விளங்கும். நண்பர் மேல் மறுத்தெழுதிய தொடரில் “நீரைப் போக்க விடுத்தால்” என்று இரு பிறவினை தந்து வரைந்தது வழுவாம் 'போக்க’ அல்லது ‘விடுத்தால்' எனுமிரண்டு சொற்களில் ஒன்றே பிறபொருட் டொழிலைத் தருவதாக நண்பர் மற்றொன்று விரித்தது மிகைபடக் கூறலாமென்க. இன்னபல வழுஉக்களை இவர் எழுதிய விடயங்களிற் றில தண்டுல நயமாக எளிதிற் பிரித்தெடுத்து விளக்கு தலெளிதாகவும் அவற்றில் சிலவற்றை மாத்திரம் இன்றியமையாத விடங்களிற் குறித்துப் போந்தாம்; ஏனையவற்றைப் பிரித்தலில் பெரும் பயனின்மையான் விடுத்தாம். நிற்க, இத்துடன் அமையாமல் கழிபேரிரையன் ஊணையவாவிக் கொண்டே நிற்குமாப்போல நண்பர், இவ்விரண்டு பூதத்தின் பகைமையை மறுத்துக் கேண்மையைச் சாதிப்பான் றொடங்கி “அங்ஙனமில்லாது தன்னோடு சையோகித்த அங்கியின் சூட்டைத் தான் பெறலால் நீருக்கு நெருப்பினிடத்துச் சிநேகத் துவமே சாதிக் கத்தக்கது' என்றொரு தொடர் எழுதுகிறார். அறிவுடைப் பொருளல்லா இவ்விரண்டு பூதம் ஒன்றன் குணத்தை யொன்று பெறுமாறும் விடுக்குமாறும் யாங்னம்? அறி பொருட்கன்றேயது நிகழ்தற் பாற்று. ஆகலான், இறைவனது சங்கற்ப மாத்திரையானாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/161&oldid=1590207" இலிருந்து மீள்விக்கப்பட்டது