உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

145

தொலைவிலுணர்தல்

முதற்பதிப்பின் முகவுரை

இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் அதாவது ரோதி கிருது ஆண்டு (1911) சித்திரைத் திங்களில் யாம் எழுதத்துவங்கிய தொலைவிலுணர்தல் என்னும் இவ்வுரை நூல், எமது ‘ஞானசாகரம்' என்னும் அறிவுக்கடலின் ஆறாந்திருமலரிலும் எட்டாந்திருமலரிலும் ஒன்பதாந்திருமலரிலும் பக்கங்கள் வரையில் வெளிவந்து, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாந் திருமலர்களில் தொடர்ந் தெழுதப்படாமல் நின்றுபோய். மீண்டும் 16 ஆந் திருமலரில் ஆங்கிரச ஆவணி புரட்டாசிக்குரிய ஏழு எட்டு இதழ்களில் தொடர்புகொண்டு வெளிவரத் துவங்கி, இப்போது அதன் பதினேழாந் திருமலரின் எட்டு ஒன்பதாம் இதழ்களில் எல்லாம் வல்ல இறைவன் றிருவருளால் இனிது முடிவு பெறலாயிற்று.

இங்ஙனம் இந்நூல் இடையிடையே எழுதப்படாமல் நின்று போயது ஏனெனின்; யோகநித்திரை, மனிதவசியம், மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி?, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பேராராய்ச்சிப் பெரும்பயன் நூல்களும் வேறுசில சிறு நூல்களும் இடையிடையே எழுதி வெளியிட வேண்டுவது இன்றியமையாததாக நேர்ந்தமையானும், அந்நூற் பொருள்களின் உண்மைகளை உள்ளவாறு ஆராய்ந்து எழுதுதற்குத் தமிழ் ஆங்கிலம் வடமொழி என்னும் இந்நூற் பொருளின் உண்மைகளையும் உண்மை நிகழ்ச்சிகளால் ளக்குதற்கு இன்னும் பல நூல்களைப் பயில வேண்டுவது முதன்மையா யிருந்தமையானும், மேற்கிளந்த நூல்கள் முடியுந்தனையும் இந்நூலை இடையே பல ஆண்டுகள் நிறுத்தி வைக்க இருபத்துநான்கு ஆண்டுகளுக்குப் பிறகாவது இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/178&oldid=1590225" இலிருந்து மீள்விக்கப்பட்டது