உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் 26

முற்றுப்பெறும்படி அருள்புரிந்த எம்பிரான் றிருவடிகளுக்கு அடியேங்களின் புல்லிய வணக்கங்கள் உரிய வாகுக!

'தொலைவிலுணர்தல்' என்பது ஐம்புலன்களுக்கும் எட்டாத் தொலைவிலுள்ள பொருள்கள் உயிர்கள் பொருணிகழ்ச்சிகள் உயிர் நிகழ்ச்சிகளை மக்களாகிய நாம் நமதுள்ளத்தால் உணரப் பெறுதலே யாகும். ஐம்புலன்களின் வாயிலாகவன்றி எதனையும் உணரமாட்டாத எளிய நிலையில் நிற்கும் நாம், அவ்வைம் புலன்களுக்கும் எட்டாத இடத்திலுங் காலத்திலும் உள்ள பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் ஒரோ வொருகாற் கனவிலும் நம் அகக்கண்ணெதிரே சடுதியிற் கண்டு, அங்ஙனங் கண்டபடியே பின்னர்ப் புறக்கண்ணெதிரேயும் அவை தோன்றக் கண்டால் அப்போது நாம் எவ்வளவு இறும்பூதெய்துகின்றோம்! கனவிலோ நனவிலோ நாம் நம் அகக்கண்ணாற்கண்டு நினைவுற்ற ஓரிடத்தே அங்ஙனங் கண்ட படி யே சிறிதும் பிசகாது நமது புறக்கண்ணேதிரேயுங் காணநேருங்கால் அப்போது நாம் எவ்வளவு வியப்புறுகின்றோம்! இன்னும் நமக்கு இனியராயினார் ஒருவரைப்பற்றி நாம் ஆழ்ந்து நினைந்து கொண்டிருக்கையில், அவர் நமக்கெதிரே வந்தாலும், அல்லாதவரிடமிருந்து எதிர் பாராமலே ஒரு கடிதம் வந்தாலும் அப்போதும் நாம் எவ்வளவு வியப்பினை அடைகின்றோம்!

வ்வாறு ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருகாலன்றிப் பல காலும் ஆங்காங்கு நிகழ்தலை நம்மனோர் தம்மாட்டும் பிறர் மாட்டும் அடுத்தடுத்து அறிந்துவைத்தும், அவற்றைப் பற்றி ஆராயாதும், அவ் வாராய்ச்சியாற் பெறும் பெரும்பயனைப் பெறாதும் வாளா நாட்கழித்து மாய்ந்து போதல் எத்துணை இரங்கத்தக்க தொன்றா இருக்கின்றது!

6

இவ்வுடம்பும் இவ்வுடம்பிலமைந்த ஐம்புலங்களும் நமக்கு

அறிவை வளர்த்தற்கும் இன்பத்தைப் பெருக்குதற்கும் இன்றியமையாதவைகளாய் இருந்தாலும், இவையிற்றின் உதவி யில்லாமலே பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே யறிந்து கொள்ளுதற்குரிய அறிவும் ஆற்றலும் உடையவர்களாய் இருக்கின்றோம் என்பது மேல் நிகழ்ச்சிகளால் விளங்க வில்லையா? இத் துணைச் சிறந்த அறிவாற்றல் நமக்கு இயற்கையாகவே யிருந்தும், ஏதோ ஓர் இருள் நம்மறிவைக் கவிந்து கொண்டிருத்தலினாலன்றோ, இவ்வுடம்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/179&oldid=1590226" இலிருந்து மீள்விக்கப்பட்டது