உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

169

ஆகவே, இத்துணைப் பிணைப்புகளோடுங் காணப்பட்டுச் செல்லா நின்ற மக்களியற்கை உலகவியற்கைகளை அளந்து ஆராய்ந்து கண்டு, அப்பிணைப்புகளின் சிக்கலை விடுவித்து, ஒவ்வொன்றனையும் இழையிழையாகத் தம் உணர்வினாற் பிரித்துப் பார்த்தும், பின்னர் அவற்றை இயைத்துப் பார்த்தும், அவற்றால் மக்கள் அடையும் முடிபுகளைச் சுவைதுளும்பத் திறனாக அமைத்துக்காட்டும் நல்லிசைப்புலவரே கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் இயற்றுதற்குரிய ரென்றுணர்ந்து கொள்க.

அற்றேல், நாடகங்கள் காப்பியங்களுக்குங் கதைகளுக்குந் தம்மில் வேறுபாடு என்னையெனிற், கூறுதும். பழையகாலத் தமிழில் இம்மூன்றுஞ் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன. மற்று, இக்காலத்திலோ காப்பியங்களைத் தவிர ஏனை இரண்டும் உரை நடையிலேயே பெரும்பாலும் இயற்றப் படுகின்றன. ஓராயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நாடகத்தமிழ்நூல் வடித்த செந்தமிழ்ச் செய்யுட்களினாலேயே ஆக்கப்பட்டிருக் கின் றது. இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குமுன் வடமொழியிற் காளிதாசரால் இயற்றப்பட்ட சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், மாளவிகாக்நிமித்ரம் என்னும் நாடகங்கள் மூன்றும் பாட்டும் உரையும் விரவிய நடையில் ஆக்கப் பட்டிருக்கின்றன. இற்றைக்கு முந்நூற்றைம்ப தாண்டுகளுக்கு முன் மேற்கே இங்கிலாந்து தேயத்திலிருந்த ‘ஷேக்ஸ்பீயர்’ (Shakesphere) என்னுந் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆங்கிலநாடக ஆசிரியரும் பாட்டும் உரையும் விரவிய நடையிலேயே தம்முடைய நாடகங்களை இயற்றியிருக்கின்றார். ஆனாலும், இஞ்ஞான்று ஆங்கிலத்தில் நாடகங்கள் வரையும் 'பெர்னாட்ஷா' (Bernard Shaw), 'கால்ஸ் உவர்த்தி' (Galsworthy) ‘பாரி’ (Barrie) முதலான ஆசிரியர்களோ முழுதும் உரைநடையிலேயே அவை தம்மை இயற்றுகின்றார்கள். என்றாலும், நாடகங்களைச் செய்யுளும் உரையும் விரவிய நடையில் இயற்றும் முன்னையாசிரியர் வழக்கமே சிறந்த தொன்றாகக் காணப்படுகின்றது.ஏனென்றால், உணர் வெழுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/202&oldid=1590249" இலிருந்து மீள்விக்கப்பட்டது