உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் - 26

தோன்றாத வெறுங்காலங்களில் மக்கள் இயற்கையாகவே உரைநடையிற் பேசுகின்றார்களாயினும், மிகுமகிழ்ச்சி, மிகுகவலை, மிகுதுயரம், மிகுசினந்தோன்றப்பெறும் நேரங்களில் அப்போது தாமிருக்கும் நிலைக்கேற்றபாட்டுகளைப் பாடுவதிலோ, அல்லது செய்யுள்நடையிற் பேசுவதிலோ முனைந்து நிற்கின்றார்கள்; அந்நேரங்களில் வெறிதான உரைநடையிற் பேசுதல் அவர்கட்கு இயல்வதில்லை. அறிவில் மிகச்சிறந்தார் முதல் அதில்மிகக் குறைந்தார் ஈறான எல்லாரும் மகிழ்ச்சி மிக்க நேரங்களிற் பாட்டுப்பாடி யின்புறுதலைக் காண்மின்கள்! மிகு கவலை மிகு துயரங்கொண்ட காலங்களிற் பெண்மக்களும் ஒப்பாரி சொல்லி யழுதலைக் காண்மின்கள்! மிகச்சினந்து கலாம் விளைப்பவர்கள் அடுக்கடுக்கான சொற்களைச் செய்யுள்நடையிற் பெய்து உரத்துக் கூவுதலைப் பார்மின்கள்! ஆகவே, உணர்வெழுச்சி தோன்றும் இடங்களிற் பாட்டும், அஃதில்லாது உணர்வுஞ் செயலும் அமைதியாகச் சல்லும் டங்களில் உரையும் வர நாடகநூல்கள் இயற்றுவார் பக்கமே மக்களியற்கையொடு பெரிதொத்து நிற்பதாகும்.

இனிக், கதைநூல்களெல்லாம் இஞ்ஞான்று உரைநடை யிலேயே இயற்றப்படுகின்றன. இவற்றுள் ஒரோவிடங்களிற் செய்யுட்களுங் காணப்படுதல் உண்டெனினும், அவை அக்கதையுள் இயங்குவார் மகிழ்ச்சிமிக்கோ துயரம்மிக்கோ பாடுவனவாய் அருகிவருமே யல்லாமல், நாடகங்களிற்போலப் பெருவரவினவாய்ப்

புகுவன வல்ல. இதுவேயுமன்றி, நாடகங்களில் அவற்றை யியற்றும் ஆசிரியன் உரையாகத் தொடர்ந்து வருவன எவையும் இரா; எல்லாம் நாடகங்களில் இயங்குந் தலைமகன் தலைமகள் பாங்கன் பாங்கி என்றற் றொடக்கத்தார் உரையாடும் உரையாட்டு களாகவேயிருக்கும். மற்றுக், கதை நூல்களிலோ தலைமகன் தலைமகள் முதலாயினார் நேர்முகமாகவோ, அன்றி ஒரோவொரு கால் தனிமையிலிருந்து தாமாகவோ பேசும் உரைகளைப் பிணைப்பதோடு, அக்கதைநூல்களை இயற்றும் ஆசிரியன், தலைமகன் தலைமகள் முதலாயினார் தம் இயற்கைகளைப் பற்றியும், அவர்தம் ஒழுகலாறுகளைப் பற்றியும், அவற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/203&oldid=1590250" இலிருந்து மீள்விக்கப்பட்டது