உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் 26

தாகத் தாங்கள் கூறியதை விளக்கிக் காட்டாததும் விவேகிகளுக்கு மனஸ் தாபத்தையே யுண்டு பண்ணிய தென்க.

பூர்வபட்சம்

மாயாவாதிகள் ஜகஜீவபரங்கள் உண்டென்று சொல்லு கிறார்கள் என்று எழுதிய நாயகர், ஏகாத்மவாதம் நிலை பெறாதழிந்தது என்று பின்னர்க் கூறியவாறென்னை?

சித்தாந்தம்

ஜகஜீவபரங்கள் உண்டென்றால், ஏகாத்மவாதம் நிலை பெறாதென்பது சத்தியமே. மூன்று பொருள்கள் உண் டன் பாரது மதத்தில் ஒரு பொருடா னுண்டென்னுஞ் சித்தாந்தம் நிலை பெறுமாறு யாங்ஙனம்? ஜகஜீவபரங்கள் விவகாரத்தி லுண்டென்று மாயாவாதிகள் கூறுவதாக நாயகரவர்கள் சால்லியிருக்கலாம். அவ்வளவேயன்றி மாயாவாதிகள் ஜக ஜீவபரங்களைப் பரமார்த்தத்தி லுண்டென்று சொல்லு வதில்லை. அவர் கூறும் விவகாரமெல்லாம் அவரது மதத்தில் வெறும் பொய்யாம். இவ்வாறு அவர் கூறும் உபதேசவொலி பனையின் சலசலப்பொலி யோடுதானே சேரும் பண்பி னதாம். இனிச் சகசீவபரங்கள் சத்தியமென்பது சித்தாந்த மாகையால், மாயாவாதிகளது ஏகாத்மவாதம் நிலைபெறா தழிந்தது என்று நாயகரவர்கள் கூறியது ஸாமஞ்சஸமேயாம்.

பூர்வபட்சம்

மாயா

ஜீவான்மா, பரமான்மா என்னுமிரண்டில் வாதிகள். எந்த ஆன்மாவை ஏகமெனக் கொண்டார்களென்று நாயகரெண்ணி ஏகாத்மவாதம் அழிந்தது என்றனர்?

சித்தாந்தம்

மாயாவாதிகளது மதத்தில் ஜீவான்மாவும் பரமான் மாவும் ஒரே ஆன்மா என்பது நிச்சயமாகையால், தாங்கள் ஜீவான்மா பரமான்மா என்னுமிரண்டில் என்றது பிழையாம். ஜீவான்மா கல்பிதமும், பரமான்மா சத்தியமுமாயிடுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/53&oldid=1590094" இலிருந்து மீள்விக்கப்பட்டது