உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

21

அவரது மதம். ஜீவான்மபரமான்ம பேதங்கள் விவகாரமேயன்றி பரமார்த் தத்தில் ஆன்மா ஏகமென்பதே அவரது முடிவாம். அதனால் அவரது மதம் ஏகாத்ம வாரமாயினது சத்தியம். அவ்வேகாத் மவாதத்தை அவர் தேடிக் கொண்ட பழுதை- பாம்பு முதலிய வுவமைகள் சாதித்துக் கொடுக்காமையால் நாயகரவர்கள் அவரது ஏகாத்மவாதம் நிலைபெறாதழிந்தது என்றது ஸர்வஸம் பிரதிபந்நமாயின துணர்க.

பூர்வபட்சம்

சிவம் ஆதாரம், உலகம் ஆதேயம். அவ்வாறே பிரமம் ஆதாரம், உலகம் ஆதேயம் என்பது சைவ சித்தாந்தி மாயாவாதி இருவர்க்கும் ஒப்ப முடிந்த தன்றோ?

சித்தாந்தம்

சிவம் அல்லது பிரமம் ஆதாரமும், உலகம் ஆதேயமும் என்பது சைவ சித்தாந்திக்கே யொப்ப முடிந்தது. மாயாவாதி ஆன்மாவையே பொருளெனக் காண்டமையால் நிறுத்தப் பொருள் பிரம்ம மாகாது. அதனால், அவனுக்குப் பிரமம் ஆதாரமென்பது கூடாது. அவன் சைவசித்தாந்தியைப் போல் ஆதார ஆதேயங்களாக இரண்டு பொருள்களை யொப்புவது மில்லை. அவனுக்கு ஆதாரமும் ஆதேயமும் ஒரு பொருளேயாம். அவனது பரமார்த்தத்தில் ஆதார ஆதேயப் பிரஸக்தியு மின்றாம். அவனது மதமும், சைவ சித்தாந்தி மதமும் ஒன்றாயின தில்லையறிக. தாங்கள் காட்டிய ஹாலாஸ்ய மாஹாத்மிய வசனம் சைவ சித்தாந்திக்கே பயன்பட்டவாற்றிக தாங்கள் கொண்ட “உண்மை ஞானப் பிரியன்” என்னு நாமத்துக் கேற்ப உண்மை ஞானத்தை யுணர்ந்துய்வீர்களென்று திருவருளைச் சிந்திக்கின்றேன். இவர் நிற்க.

வேறொரு நண்பர் எமது நாயகரவர்களைச் சுட்டி "கேண்மை வினா" என்று சில வினாக்களையெழுப்பினர். அவைகட்கும் முன் சகோதரரே விடை கூறினார். அவ்விரண் டனையும் ஈண்டு முன்போல வரைந்திடுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/54&oldid=1590095" இலிருந்து மீள்விக்கப்பட்டது