உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் 26 பூர்வபட்சம்

மறைத்தலைச் செய்யும் ஆணவமலமும், நினைத் தலைச் செய்யும் மாயாமலமும், பிறத்தலைச் செய்யும் கன்ம மலமும் ஒன்றோடொன்று பொருந்தாத (மாறு பட்ட)தன்மையை புடையனவாக விருப்பதால் பசுவுக்கு அநாதியாக மும்மலமும் உண்டென்று சொல்லக்கூடுமா?

சித்தாந்தம்

தாங்கள் ஒன்றோடொன்று மாறுபட்ட மலங்கள் அநாதியி லான்மாவினிடத்தி லெப்படியிருக்கக்கூடு மென்றா சங்கித்தீர்கள். அநாதியி லவையிருப்பதி லாசங்கை நிகழ்த்தின மையால்., அநந்தரம் அவை யொன்றுகூடி யிருப்பதிற் றங்களுக்கு ஆசங்கையுண்டாயினதாகத் தோன்றவில்லை. அதாவது இப்போது ஒரு ஆன்மா தேகாதிகளைப் பெற்றிருக்கின்றது. இதில் மறைப்பு, நினைப்பு, பிறப்புகளுக்கு மூலமாகிய ஆணவமாயை கன்மங்கள் கூடியே வாழ்கின்றன. ஒன்றோ டொன்று மாறுபட்ட மும்மலங்களும் இப்போது கூடிவாழ்தல் போலவே அநாதியிலுங் கூடி வாழ்ந்தன வென்றறிக.

பூர்வபட்சம்

மாயாமலத்தாலும் கன்ம மலத்தாலும் பசுவுக்கு அநாதி

யில் ஏதாவது சுகதுக்கமுண்டா?

சித்தாந்தம்

ஆணவத்தை ஆன்மா வநுபவிக்குஞ் சுழுத்தியில் மாயை னனுபவமாகிய சுகதுக்கமில்லாமை போல

கன்மங்களி

றியத்தக்கது.

பூர்வபட்சம்

பசுவின் மும்மலங்களை நீக்க வேண்டுமென்று பரமன் கருணை கொண்டதும், பதியானது பசுக்களுக்குத் தநுசுரண புவனபோகம் உண்டாக்கியதும் எப்போது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/55&oldid=1590096" இலிருந்து மீள்விக்கப்பட்டது