உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்தம்

  • வேதாந்த மதவிசாரம்

23

அநாதியில்.

பூர்வபட்சம்

பசு ஆகாமிய-சஞ்சித-பிராரத்த கன்மங்களை அடைந்த தெப்போது?

-

சித்தாந்தம்

தநு - கரண-புவன போகங்களைப் பரமன் கூட்டிய வனந்தரம்.

பூர்வபட்சம்

அநாதியாயுள்ள வஸ்துக்களுக்குக் காரணஞ்

சொல்லலாமா?

சித்தாந்தம்

காரணஞ்சொல்லார் அறிஞர்.

பூர்வபட்சம்

இருவினையற்றால் முத்தியா?

மும்மலமற்றால்

முத்தியா? முக்தியில் பசுவானது பதியுடன் கலந்தால் பாசமடைந்த கதியென்ன?

L

சித்தாந்தம்

இருவினையறுதல் முத்திக்குச் சமீபம். மும்மலமற்றுத் திருவடிப் பேறெய்துதலே முத்தி. முத்தியில் பசுவானது பதி யுடன் புதுசாய்க் கலப்பதில்லை. முன்னரே கலந்திருந்த பதியை மலத்தாற் றரிசியாதிருந்த ஆன்மா அம்மல நீங்கியதனாற் றரிசித்தின்புறு மென்றறிக. ஆதித்தன் சந்நிதி யையடைந்த நேத்திரத்தை (முன்மறைத்திருந்த) இருளானது மறைக்காமலும், முனைத்துத் தோன்றாமலும், முதல் கடாமலும் நிற்குமென்றறிக. இவர்நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/56&oldid=1590097" இலிருந்து மீள்விக்கப்பட்டது