உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் - 26

வேறொரு மாயாவாத பண்டிதர் "இந்து இந்து” என்னும் பெயரால் வெளிப்பட்டுச் சிற்சில வஸங்காத்மவாதங்களைப் பெருக்கிச் சிவனடியார் தூஷணம், சைவதூஷணங்களைப் பரப்பி ஒரு நூல் வெளியிட்டனர். அதனைத் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபையார் பரிகரித்து உபகரித்தனர். அதனையும் ஈண்டு ஸாதுக்க ளுபயோகார்த்தம் வெளிப்படுத்தி யுபகரிப்பாம்.

இந்துவுக்கோ ரிதோபதேசம்

-

மாறுகொளக்கூறல் முதலிய

நிறைத்தெழுதினீர்.

இந்துவே! நீர் வெற்றெனத்தொடுத்தல் - மற்றொன்று விரித்தல் - கூறியது கூறல் பலகுற்றம்படப் L பத்திரிகையை அதனுளடங்கிய விஷயம்

1. நும்மவர் மாயாவாதிகளல்லரென்பதும்,

2. ஸ்ரீமத் சோமசுந்தரநாயகரவர்கள் மாயாவாதிகளாகிய நும்மவர்க்குத் தோற்றாரென்பதும்,

இதர பதார்த்தங்கள்

3. பிரமம் ஒன்றேயுள்ளது, (ஜகசீவபரங்கள்) காலத்திரயத்துங் கிடையா வென்பது மேயன்றோ? அவைகளை முறையே விசாரித்திடுவாம்.

மாயாவாதவிசாரம்

ஆஸ்திகசமயிகள் ஒவ்வொருவரையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நாமங்களே ஈசுவரவாதிகளென உணர்த்தி நிற்பதுபோல், உம்மவர்க்கு ஏற்பட்ட நாமங்களே உம்மை மாயாவாதிகளென உணர்த்தி நிற்கின்றன. அஃது எங்ஙன மெனின்;--சிவனைத் தெய்வமாய்க் கொண்டவர் சைவர், விஷ்ணுவைத் தெய்வமாய்க் கொண்டவர் வைஷ்ணவர் எனக் கொள்வது போல வேதத்தைத் தெய்வமாய்க் கொண்டவர் வைதிகர், ஸ்மிருதியைத் தெய்வமாய்க் கொண்டவர் ஸ்மார்த்தரென்றுதானே கொள்ள வேண்டும்? அப்படிக் கொள்ளுங்கால் நீவீர் மாயாகாரியமாகிய நூல்களையே தெய்வமெனக் கொண்ட மாயாவாதிகளென்பதற்கு யாது தடை? நூல் சம்பந்தமான பெயர் வைத்துக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/57&oldid=1590098" இலிருந்து மீள்விக்கப்பட்டது