உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

25

மாத்திரையானே தாங்கள் நூலைத் தெய்வமெனக் கொண்ட வராயின், பாஞ்சராத்திரிகள் வைகானசர் முதலினோரையும் அங்ஙனமல்லவோ கூறவேண்டி வருமென்பீராயின், அற்றன்று. அவர்கட்கு நூலின் சம்பந்தமான பலபெயரிருப்பினுந் தெய்வ சம்பந்தமான பெயருமிருத்தலானும், உம்மவர்க்கு அங்ஙனந் தெய்வ சம்பந்தமான பெயர் யாதொன்று மின்மை யானும் அத் தோஷமவர்மாட்டணுகாமல், உம்மவர் பக்கலே குடிகொள்ளு மென்க. இனிப் பிரமவாதிகளெனக் கூறு மெமக்குத் தெய்வ மில்லையென்பது யாங்ஙனம் என்று நீர் வாதிக்கலாம். இப்பிரம வாதிப் பெயர் உம்மவரை மாயாவாதிகளெனச் சைவ சாஸ்திரங் களும் சைவர்களும் பிரஸ்தாபிக்கும் அவமானத்திற் கஞ்சி நேற்று நவீனமாகச் சூடிக் கொண்ட தல்லவோ? இப்பெயரை நேற்று முளைத்த சிசுப்பிராயர்கள் சிலரேயன்றி உமது முன்னோர் களாகிய பூர்விக மாயாவாதிகள் யாவரா யினும் எந்த நூல்களி லாவது தங்களுக்குரியதென வழங்கி வந்திருப்பதுண்டா? சிவம்-பிரமம் என்பன பரியாயச் சொற்களாகலின். உபநிஷத்துக்களில் பிரமவாதிகளெனப் படிக்கப்பட்டது சைவர்க்கே சொந்தமாம். அப்பெயர்க்கு நீவிராசைப் படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படுவதையே நிகர்க்கும். இஃதன்றியும் வேதம் நித்தியம் என்பது உமது மதம். ஒன்றுக்கேயன்றி இரண்டுக்கு நித்யத் வங்கூறின் உமது அத்வைதமதம் கெடுமென்றறியாமல் தியங்கு கிறீர். நீவிர் மாயாகாரியமான நூலையே தெய்வ மெனக் கொண்ட மாயாவாதிகளென்பது மறுக்கமுடியாத முடிபாம். அன்றியும் நும்மவர்க்கு இப்பட்டங் கொடுத்தவ ரென்ன சாமான்யர்களா? சர்வலோக நாயகராகிய சோமசுந்தரக் கடவுளே "விண் "விண்புரை முடிமிசை மண்பொறை சுமந்தும். நீற்றெழின் மேனியில் மாற்றடி பட்டும்" ஆட் கொண்டருளிய ஸ்ரீமந் மாணிக்க வாசக சுவாமிகளும். ஸ்ரீ நடராஜப் பெரு மானை அடி யார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்-குடியார்க்கெழுதிய கைச்சீட்டுப்-படியின்மிசை-பெற்றான் சாம்பனுக்குப் பேதமறத் தீக்கை செய்து-முத்தி கொடுக்க முறை” என்னுந் திருமுகப் பாசுரம் விடுத்தருளும் ஒரு நிரூப நேசராக்கிக் கொண்ட உமாபதி சிவாசாரிய வள்ளலும், அவ்வள்ளலாரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/58&oldid=1590099" இலிருந்து மீள்விக்கப்பட்டது