உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் - 26

பரமாசிரிய மூர்த்த மாகிய சகலாகம பண்டித ரென்னும் அருணந்தி சிவாசாரிய சுவாமிகளுமே சுவாமிகளுமே அப் பட்டங் கொடுத்தவர்கள். அந்தச் சிவ ஞானச் செல்வர்களாற் கொடுக்கப்பட்ட பட்டத்தை அவ ஞானப் புலவர்களாகிய நும்மவர் எங்ஙன மாற்றக்கூடும்? கூடாது! கூடாது! அதனை மாற்றிக் கொள்ள முயல்வது கடலைக் கையால் நீந்திக் கரைசேர முயல்வதையே நிகர்க்கும். நிற்க.

ஸ்ரீ நாயகரவர்களைத் தூஷித்ததற்குப் பரிகாரம்

நீர் வைதிகசைவ சித்தாந்த சண்டமாருதமாகிய ஸ்ரீமத் நாயகரவர்களை நும்மவர்க்குத் தோல்வியடைந்து ஒளித்துக் காண்டதாயும், அப்பாலிவ்வூர்ச் சபை மூலமாய் வெளி வந்திருப்பதாயும் பேசி மகிழ்ந்தீர். இராக் காலங்களில் சூரிய னொளித்துக் கொள்ளுகிறானென்று கூறுவதை நம்பத்தக்க வரேயன்றி விவேகிகள் யாரேனும் இதனை நம்புவார்களா? எதனால் நம்ப மாட்டாகளென்னில் நும்மனோர்க்கும் ஸ்ரீமத்நாயகரவர்களுக்கும் நடந்து வந்த விவதாம்சங்களைத் துலைநாவன்ன தமது அறிவால் நிறை பார்த்து வந்த வித்வஸிம்ஹமும், நிஷ்பட்சபாத நெறிபிறழாச் செங்கோல் வேந்தரும் ஆகிய ஸ்ரீ சேது பாஸ்கர வள்ளலார் எமது நாயகரவர்கள் பாற்றோன்றிய நியாயவாத மென்னுஞ் சண்டமாருத சமூகத்தில் மாயாவாதிகளாகிய நும்மவ ரெல்லா மகப்பட்டுப் பஞ்சாய்ப் பறந்து போனதைப் பார்த்து நாயகர வர்களை நோக்கி உங்கள் எதிரிகள் புறங்காட்டிய பின்னரும் நீங்களேன் எடுத்த ஆயுதத்தைக் கீழே போடாமலிருக் கின்றீர்கள்? இப்போதே போட்டு விடுங்கள் என்று கூறியதும், அக்காரணந் தோன்ற அவர்கட்கு “வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம்” எனப் பட்டங் கொடுத்து, தமது சமஸ்தான நாமந் தீட்டிய பொற்கடகவிருது புனைந்ததும் உலகப் பிரசித்தி யாயினதாலென்க.

பிரமம் ஒன்றேயுளது என்பதை விசாரித்தல்

நீர் பிரமமொன்றே திரிகாலத்துமுள்ளதெனவும் இதர பதார்த்தங்கள் (பசுபாசங்கள்) காலத்திரயத்துங்கிடையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/59&oldid=1590100" இலிருந்து மீள்விக்கப்பட்டது