உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

27

வெனவுஞ் சாதிப்பான் றொடங்கி முன்னுக்குப் பின் விரோ தமா யேதேதோ எழுதிப் பத்திரிகையை நிரப்பியிருக்கின்றீர். அதில் நாயகரவர்கள் கூறிய சித்தாந்தத்தில் ஒன்றையேனும் அநுவ தித்துத் தக்க சமாதானங் கூறாமல் மற்றொன்று விரித்தலிலிறங்கி மானங்காத்துக் கொண்டீர். இனிப் பிரம மொன்றே யென் பதற்கு நீர்கொண்ட பிரமாணம்யாது? சுருதியா? யுக்தியா? அனுபவமா? சுருதியென்னில், அந்தச் சுருதி எதை ஒன்றென யாருக்குபதேசித்தது, பிரமத்துக் கென்னில், பிரமம், சுருதி உபதேசத்தால் தெளிய வேண்டிய அஞ்ஞான பிண்டமா? ஜீவர்களுக்கென்னில் உமது ஏகாத்ம வாதத்தின்றலையி லிடிவிழுந்ததன்றோ? அற்றன்று, கட சந்திரனைப் போல அந்தக் கரணப் பிரதிபிம்பமான சாயாப் பிரமங்களுக்கென்னில், பிரமத்துக்கு அன்யமாய் அந்தக் கரணமென ஒரு முதலுண் டெனவும், அது இருந்தவிடத்தில் பிரமமில்லையெனவும், அதனால் பிரமம் கண்டப் பொரு ப் ளெனவும் அங்கீகரிக் கப்பட்டுப் போமாகையால் உமது போலி அத்துவிதம் தலை தூக்குமாறில்லையறிக. வேத மொருமுதல் பிரமமொரு முதலெனக் கூறுநீர் எப்படியோ ஏகவாதஞ் சாதிப்பது? ஞான வடிவாகிய பிரமத்தை அஞ்ஞான முடையதெனவும், ஜடமாகிய வேதத்தை ஞான முடைய

தனவும் மாறுபடக்கூடும் விபரீத ஞானிகளென உம்மை மேலோர் அருவருக்கின்றனர் கண்டீர். உமது அபசித்தாந் தத்துக்குச் சுருதி ஆதாரமாகுமென்பதை அடி யோடே மறந்து விடும். பிரமம் பரிபூரண வஸ்துவானதால் ஒன்று பூரண மாயிருக்குமிடத்தில் மற்றொன்றிராதென்னும் யுக்தியே பிரமாணமென்னில், நன்று! நன்று!! கடவுளுண்டெனக் கொள்ளும் ஆஸ்திகர் யாவரும் கடவுளைப் பூரணரென்றே அங்கீகரித்திருக்கின்றனர். அவரெல்லாம் ஏனோ மண்ணும் பிரமம்-மயிரும் பிரமம்-கழுதையும் பிரமம்-குதிரையும் பிரமம் - சுமப்பவனும் பிரமம் - துன்பம் செய்பவனும் பிரமம் பல்லக்கும் பிரமம்-செலுத்துபவனும் பிரமம்-துன்பப்படு பவனும் பிரமமெனக் கூறும் உமது மதத்திற் புக்குழலாது புறம்பாயினார்? உம்மவருக்குத் தோன்றிய இந்த அபூர்வயுக்தி அவர்களுக்கெல்லாந் தோன்றாமல் போனதென்ன? உம்மைப் அவர்கள் சாயாப்பிரமங்களல்லவோ? உமது

போல

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/60&oldid=1590101" இலிருந்து மீள்விக்கப்பட்டது