உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் 26

கூற்றெல்லாம் பிரதூஷணமாவதே யன்றிப் பிரமஞான மாகாது கிடீர். அற்றேல் ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்றிரா தென்னும் யுக்திக்கு வழியே தென்னில், அந்த நியாயம் உருவப் பொருளைப் பாதிக்குமேயன்றி அருவப்பொருளைப் பாதிக்க மாட்டாதென்க. அதனைக் காட்டுந்தன்மை யுடைய கதி ரொளியுங், காணுந்தன்மையுடைய கண்ணொளியும் அத்து விதமாய்க் கலந்து ஒரு பொருளைக் காணுந் திருஷ்டாந்த முகத்தாற் றெளிந்திடுக. இனிக் கண்ணுக் கவ்வொளி இயற்கை யிலின்று செயற்கையால் வந்ததெனின், கதிரொளி முதலிய எவ்வித வொளியும் எய்தப்பெறாத இருட்டறையில் பூனை- எலி முதலிய பல ஜந்துகளுக்குக் கண்தெரிவதற்குக் காரணம் யாது? இதற்குத் தக்கவிடைவந்த பின் அவ்விசாரத் தில் தலையிடுவோம். இனி யுண்மைதான் யாதெனில். எம் அனுபவத்தில் ஒன்றெனப்புலப்படவில்லை. உம்முடை ய அநுபவத்திலும் அவ்விதம் புலப்பட்டதாய்த் தோன்றவில்லை. உமக்கு அவ்வித அனுபவம் உண்மை யாயிருக்கும் பக்ஷத்தில் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் வேறு, நீர் வேறுஎனக் கொண்டு இவ்வளவு விவாதஞ்செய்யக் காரணமில்லை. எமது அனுபவத்தி லில்லாவிடினும் மேலோரனுபவ மெல்லாம் அப்படியே யிருந்திருக்கின்ற தென்பீராயின், அதனை யங்கீகரிக்கின்றோம். அதனால் பிரமமொன்றே சத்தியமென நிர்ணயிக்கப்பட மாட்டாது. எதனாலெனின், பிரபஞ்சத்தையே தியாணித்துக் கொண்டிருக்கும் பிரபஞ்ச தரிசிகளுக்கு எப்படிப் பிரமந் தோன்ற வில்லையோ, அப்படியே பிரமத்தையே தியானித்துக் கொண்டிருக்கும் பிரமதரிசிகளுக்குப் பிரபஞ்சந் தோன்றாது. பிரபஞ்ச தரிசனத்திற்றோன்றாத பிரம்ம

இலபொருளாகுமானால் பிரமதரிசனத்திற்றோன்றாத பிரபஞ்சமும் இல் பொருளாகும். அற்றேல் பிரபஞ்சத்தைக் கானல்நீரெனச் சித்தாந்த சாஸ்திரங்கள் கூறுவ தென்னை யெனின், அஃது காரியமாகிய மாயேயத்தை நோக்கியே யன்றிக் காரண மாகிய மாயையை நோக்கியன்று. சுருதி யுக்தி யனுபவ மென்கின்ற மூன்று பிரமாணங்களும் உம்மை நட்டாற்றில் விட்டுச் சைவரையே சார்ந்து கொண்டமை யால், உமது போலியத்துவிதத்தைப் புறக்கணித்துச் சைவ சித்தாந்த சுத்தாத்வைத மெய்ந் நெறியையே கைக் கொண்டாழுகுவீராக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/61&oldid=1590102" இலிருந்து மீள்விக்கப்பட்டது