உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

29

அங்ஙனமே உமது முன்னோர்களாகிய ஜனகமகாராஜரும், தி சங்கரா சாரியரும் முறையே விநாயகக் கடவுளையும் ஸ்ரீ நீலகண்டசிவாசாரிய சுவாமிகளையும் ஆசிரயித்து, சைவ சித்தாந்த வுண்மையைக் கடைப்பிடித்துப் பிழைத்திருக் கின்றனர். அதனைப் பார்க்கவ புராணத்தானும், ஸ்ரீ நீலகண்ட விஜயத்தானும் உணர்ந்துய்வீராக. இவர் நிற்க.

இவ்விஷயத்தை யின்னுமொருநண்பர் வெளிவந்து விசாரித்தனர். அதனையும் ஈண்டு வெளிப்படுத்துவாம். மாயாவாதியாகிய இந்து வென்பவர் “அத்வைதிகள்” என்று ஆரம்பித்தனர். அத்வைதிகள் என்றால் ஒருவரா? பலரா? இவர் “அத்வைதம்” என்ற பதத்திற்கு இன்மைப் பொருள் விரித்து இரண்டில்லாதது ஒன்றெனப் பொருள் கொண்டன ரன்றோ? (ஈண்டு இவர் என்றது இவரினத்தவர் யாரையுஞ் சேர்த்தெனக் கொள்க.) ஒன்றாகிய பொருளுக்குப் பன்மை விகுதி இணைக்க இவர் எந்த இலக்கணத்திற் கற்றாரோ அறியேம். மரியாதைப்பன்மையெனக் கூறுவாராயின், இவர் எண்ணின் மேற் கூறுவதால் அது பொருந்தாது. இனி மாயாவாதமயக்கத் தால் “கள்” விகுதியையுங் கூடச் சேர்த்துக் காண்டரென்றே கூறல் வேண்டும். அத்வைதியென்று பெயர்பூண்ட மாயா வாதியார் “மாயா வாதி மதத்தில் பிரமம் ஒன்றேயென்றும், ஜகஜீவ பரங்கள் மித்தையென்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது” என்று நாயகரவர்கள் கூறியதனை வ்வாறு சொல்பவர்கள் அத்துவிதிகளேயாம்" என்று ஒப்பி ஏதோதோ குழறினர். இதனைச் சற்றுப் பரியாலோசிப்பாம். ஜகம் தேகேந்திரி யாதிகள். ஜீவன் அத்தேகேந்திரியாதிகளைத் தாங்கிய சேதனன். பரம் அந்தச் சீவனுக்குத் தேகேந்திரி யாதிகளைக் கொடுத்த சேதனன் என்று எம்மவர் விளக்கியதை இவர் விரோதித்தமையால் தேகேந்திரியாதிகளையும்,

66

னையும், ஈசனையும் இவர் தூஷித்தவராயினர். அதனால், இவர் செய்யும் ஈசுவர வழிபாடும், வைதிகாநுஷ்டானங்களும், ஏனைய சிவ தருமங்களும் பொய் யாம். இதனால், சகல ஸத்கர்மங்களையுங் கைவிட்டுத் தன்னைத் தவிர வேறு தெய்வமில்லையென்னும் படிற்றொழுக்கம் பூண்டவர் களாகவே இவரது கூட்டத்தவ ரெண்ணப்படு கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/62&oldid=1590103" இலிருந்து மீள்விக்கப்பட்டது