உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் - 26

இனியிவரை அத்துவிதியென்றே பாவித்துப் பார்ப் போம். இவர் மதத்தின்படி இவர் ஒருவராய்த் தனக்கன்னியமான வேறுபொருளின்றி எங்கு நிறைந்த பரிபூரணப் பொருளா யிருத்தல் வேண்டும். அவ்வாறு இவர் விளங்கு வாராயின், வரைத்தவிர வேறு பொருளிருந்ததற்கே இட மில்லை. அங்ஙனமாயின், இவர் அத்வைதியென்ற பதத்திற்கு “கள்” விகுதியைச் சேர்த்துக் கொண்டது பிசகெனவே முடியும். இனி இவர் வர் சொல்லும் வண்ணமாயேனும் இவர் அத்வைதி யாயிருக்கின்றாரோ வென்று ஆராய்வாம். இவர் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களைச் செயித்து விட்டதாயும், இன்னும் சமாஜத் தாரையு மொருங்கே ஜயிக்கப் போவதாயும் விருது

கூறுகின்றார். இவர் நீக்கமற நிறைந்திருப்பவரென்னில், ஸ்ரீலஸ்ரீ நாயகரவர் களுக்கும், சமாஜத்தாருக்கும் மட்டும் எங்ஙனம் இடம் ஒதுக்கி வைத்தனர்? ஏகமாய் மனமிறந்து நிற்குநிலையில் இவருக்கு இத்தனை அகங்காரங்கள் எவ்வாறு உதித்தன? இவரை இவ்வாறு ஆட்டிவைக்கும் செருக்காதிகள் எங்கிருந்து தித்தன? இராகத் துவேஷாதிகள் அசுத்தமாயையின் காரியங்களாதலால் அதன் வயப்பட்டி ழிந்து தமதுநிலை இன்னதெனத் தோன்றாத வலப்படும் நமது நண்பரை இனி அசுத்தமாயாவாதியென்று சொல்லுவதைத் தவிர வேறு நாமம் புகலுதற்கிடமில்லை.

இனி இவர் “அனுபவ சித்தமாய் நான் அத்வைதி யல்ல சொன்மாத்திரத்தானே அத்வைதி” என்று சொல்லித் தப்பித்துக் கொள்வாராயின், அதுவும் பொருந்தாது, ஏனெ னின், இழிகுலத்திற்பிறந்த ஒருவன் நான் என்னை அரச குமாரனாய்ப் பாவித்துக் கொண்டேன். இனி இராஜ்யத்தைக் குறித்து நான் வழக்கிடப் போகிறேன் என்று சொல்லு வானாயின், அவனை உலகமெவ்வாறு கொள்ளும்? இதனை யூகித்திடுக.

இனி வாதத்தின் பொருட்டுத் தார்க்கீகர்கள் போல ஒரு கக்ஷியையெடுத்துப் பேசத் துணிந்தேனென்று சொல்லு வாராயின், அதுவுங்கூடாது. ஏனெனின் இவருக்குச் தெரியாத ஒரு கக்ஷியை இவரெடுத்துப் பேசுவது யானை கண்ட குருடர் கதையாய் முடிதலினென்க. நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/63&oldid=1590104" இலிருந்து மீள்விக்கப்பட்டது