உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

31

இவர் அத்வைதியென்று கூறுவதனாலேயே தான் ஒன்றும், தான் ஒன்றாயிருக்கு நினைவு ஒன்றும் ஆகத் துவிதம் சித்தித்து அத்துவிதம் கெடும். இதனானே இவருக்கு முக்கியப் பிரமாணமென்று கொள்ளும் கைவல்லியத்தில் அத்துவித நிலை கூறுமிடத்து “கூடஸ்த பிரமமென்னும், நெஞ்சமு நழுவி யொன்றாய் நின்ற பூரணத்தைக் கண்டான்” ான்" என்று விளக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்க, இவர் ஜாக்கிரத்தில் றகைத் தொட்டு எழுதப் புகுங்காலத்தில் 35-கருவிகளின் விவகாரத்தை மேற் கொண்டிருக்கின்றனர். இத்தனைப் போராட்டத்தோடு இவர் தம்மை “அத்வைதி” யென்று கொண்டு வெளிவருவது மலடிமைந்தர்கள் உலகெலா நிறைந்தனரென்னுஞ் சொல்லுக் கிணையாகவே யிருக்கின்றது.

சொல்லிக்

கொண்டு

னித் தன் பெயர் தெரியாது தவித்துழல்பவராகிய இவ் விந்துவை இன்னுங்கொஞ்சம் விசாரிப்பாம். அத்வைத மென்னும் மதமொன்றுண்டா? மதம் என்றதற்கு இவர் யாது பொருள் கொண்டனர்? மதம் என்றதற்குக் கொள்கை யெனப் பொருள் கோடில் அக்கொள்கை யென்னும் பொருளிரண்

ாகி அத்துவிதங் கெடும். அத்துவிதத்தை நிலைநிறுத்தி யன்றோ பின்னரவர் மதத்தை நிலைக்கப் பண்ண வேண்டும்? அத்துவித மென்பது சைவ வைஷ்ணவர்களைப் போல ஒரு சமயமெனனில், அவ்வாறு யாண்டுங் கண்டிலம், இரண்டற்ற அத்வைதியார் தனக் கன்னிய மிருந்தாலல்லவோ. தம் மதத்தைப் போதிக்க வேண்டும்? தனக்கன்னியமில்லாத விடத்து அம்மதமிருந்து தான் யாது பயன்? அம்மதம்பற்றி இவரும் இவரினத்தவருஞ் சிவனைப் பெய்யென்று நிந்தித் துழலா நிற்பர். இவரது சமய குருவாகிய சங்கராசாரியர் சௌந்தரியலகிரியில் “வேத ரஞ்சகன் மால்புரந்தகன் வேக சண்ட குபேரனோ டாதியெண் டிசை பாலர்பொனறவு மாதியந் தமி லாததோர், நாதர் பொன்றில ரேதுன்மங்கல நாணுறுந் திற மாதலால், நீதழைந்தது யோகமம்பிகை நீலி யென்பது பாவமே.” என்று துதித்து, சிவபரஞ்சுடரை ஆதியந்த மில்லாதவரென்றும், விஷ்ணுமுதலிய தேவர்கள் பொன்றினும் பொன்றாதவ ரென்றும் விதந்தவாறென்னை? தமது பரமாசாரியர் கூறியது

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/64&oldid=1590105" இலிருந்து மீள்விக்கப்பட்டது