உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

அணுக முடியும். பகுத்தறிவில்லா

75

உயிர்களிடத்து

ரக்கமாகிய அன்பும், பகுத்தறிவுள்ள மக்களிடத்து எல்லையற்ற அன்பும் வைத்து நடந்தால் நாம் கடவுளின் உண்மைப் புதல்வர்கள் ஆவம். ஒருவன் தன்னுடன் பிறந்தாரினும் தன்னைப் பெரியனாக எண்ணி இறுமாந்து, அவரை இகழ்ந்து, அவர் துன்பங்களைப் பாராது ஒழுகுவனாயின் அவன் தந்தை அவனை விரும்பு வாரா? அதுபோலவே, ஒரே கடவுளின் மக்களாகிய நாமும் நம்முள் அன்பின்றி நம்மையே நாம் பெரியராக எண்ணிப், பிறர் துயர் களையாது இறுமாந்து நடப்பமாயின், நம் முழுமுதற் றந்தையாகிய கடவுளும் நம்மைக் கண்டு பெரிதும் அருவருப் படைவர் என்பது உண்மையேயாம். அன்புக்குப் பகைமை யாவது தன்னையே யுயர்வாக நினைக்கும் இறுமாப்பு ஒன்றேயாம். இறுமாப்பு உடையவனைக் கண்டு எல்லாரும் வெறுப்படைவதை நாம் நாடோறுங் கண்டு வருகின்றோம்.

இறுமாப்புடையவர்களுக்கு எவரிடத்தும் அன்பில் லாமையையும் நாம் கண்டு வருகின்றோம். எல்லாம் வல்ல இறைவனே தன்னுயர்வைத் தான் சிறிதும் பாராமல், கடை ப்பட்டவர்களான நம்மிடத்தும் சிற்றுயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் வைத்து உதவிபுரிந்து வருவதை நாம் நன்றாகத் தெரிந்திருந்தும், உயர்வு சிறிதுமில்லாத புல்லர் களான நாம் நம்மை உயர்வாகக் கருதி நம்மனோ ரிடத்து அன்பின்றி நடத்தல் எவ்வளவு பேதைமை! மலமும், சந்நீரும், அழுக்குஞ், சளியும், குடரும், நிணமும் வழியும் புழுப்பாண்டங்களாகிய மக்கள் தம்முள் ஒருவர் தம்மை உயர்வாகவும் பிறரைத் தாழ்வாகவும் நினைந்தொழுகு தலினும் பிறிதோர் அறியாமை உண்டோ சொல்லுமின்! ஒருவரிடத்துத் தகாத செயலும், தாழ்ந்த நடையும் இருக்கக் கண்டால் அவரிடத்து இரக்கவும் அன்பும் மிகுதியும் வைத்து, அவரைத் திருத்தித் தம்மோடொப்ப வைத்து நலம் பாராட்டி அன்பினால் அளவளாவுதலே நாம் செயற் பாலதாம்; அங்ஙனம் செய்தல் ஒன்றே நாம் இறைவன் திருவருளைப் பெறுதற்கு ஏற்ற வழியாகும். பிறர் துன்பத்தால் வருந்துவதைப் பார்த்த விடத்து உடனே அவர் துன்பத்தை நீக்க முயலுவதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/100&oldid=1591070" இலிருந்து மீள்விக்கப்பட்டது