உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

❖ ✰ மறைமலையம் – 27

நமக்கும் நம்மினும் மிக்க தேவர்களுக்கும் உடம்புகளைப் படைத்தருளியிருக்கின்றார். அவர் தாம் குறித்த காலம் வரையில் அச்சிற்றுயிர்களை அவ்வுடம்புகளில் வைத்துப் பாதுகாத்து வருகின்றார்; நம்மையும் அங்ஙனமே பாதுகாத்து வருகின்றார்! இனி அக்கால முடிவில் அவ்வுடம்புகளைச் சிதைத்து அழிப்பது போலவே நம்முடம்புகளையும் அழிக்கின்றார். எவன் எந்த வுடம்பைப் படைத்தானோ அவனே அதனை அழித்தற்கும் உரியவன் ஆவான். நாம் ஒரு சிறுபுழுவின் உடம்பைக் கூடப் படைக்க வல்லவர்களாய் ல்லாதபோது, நாம் எந்த உடம்பையேனும் இரக்கமின்றி அழிக்கக் கனவிலும் நினைக்கலாமா? அங்ஙனமாயின் இரக்கமுள்ள கடவுள் மட்டும் தாம் படைத்த ஓருயிரின் உடம்பைப் பின் இரக்கமின்றி அழிக்கலாமோ வெனின்; தன் புதல்வனுக்குத்தான் அமைப்பித்துக் கொடுத்த சட்டை அவனால் அணியப்பட்டுப் பழுதாய்ப் போன பிறகு, அதனைக் களைந்து வேறொரு நல்ல புதிய சட்டை செய்வித்துக் கொடுக்குந் தந்தையைப் போல, நம் பெருமானும் தான் ஓருயிர்க்குப் படைத்து உதவிய உடம்பாகிய சட்டை பழுதாய்ப் போனமை கண்டு வேறொரு நல்ல புதிது கொடுக்கவே அதனை நீக்கினானாகலின் அஃதவன் இரக்க இயல்பின் உயர்வையே புலப்படுத்துகின்றதல்லாமல் அது மாறுபட்ட தெனச் சிறிதும் உணர்த்துகின்றிலது. ஆகவே, நாம் எந்த உயிரின் உடம்பையுஞ் சிதைத்தலும் ஆகாது, சிதைத்து அதன் ஊனை உண்டலும் ஆகாது. அவ்வாறன்றிக் கன்னெஞ்சங் கொண்டு ஓருடம்பை அழித்து அதன் ஊனை ன உண்பவர்கள், இரக்க இயல்பை இழத்தலோடு, கடவுளுக்கு மாறாய் அவருடைய படைப்பின் நோக்கத்தையுங் கெடுத்த லால், அவர்கள் ஒரு காலத்தும் இறைவனுடைய அருளைப் பெறவே மாட்டார்கள் என்பது திண்ணம்; எக்காலத்தும் அவர்கள் துன்பத் தீக்கடலுட்பட்டுக் கரை காணாது வருந்தித் தவிப்பார்கள்.

இனி, மக்களாய்ப் பிறந்த நாம் எல்லாம் நம்முள் டையறாத பேரன்பு பாராட்டி நடத்தல் வேண்டும். கடவுள் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவ ராயிருத்தலோடு அவற்றினிடத்தே பேரன்பும் வைத்திருக் கின்றார். நாமும் அதுபோலப் பேரன்பு உடையவர்கள் ஆனாற்றான் கடவுளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/99&oldid=1591069" இலிருந்து மீள்விக்கப்பட்டது