உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

73

அக்

இங்ஙனம் சொல்லுதற்கு எட்டாப் பேர் இரக்கம் வைத்து நன்மையும் நம்மினுந் தாழ்ந்த உயிர்களையும் பாதுகாத்து அறிவு விளக்கி இன்பத்தை ஊட்டிவரும் றைவனை அறிந்து அவன் அருள்வழிச் சார்ந்து அவன்றன் உண்மை நிலையை அடைந்து இன்பவுருவாய் விளங்க வேண்டுவதுதான் எல்லாருக்கும் நோக்கமாயிருக்கின்றது. ஆனாலும், கடவுளை அடைய வேண்டுமாயின் கடவுளைப் போன்ற தன்மை நம்மிடத்தும் உண்டாக வேண்டும். தீயவரைச் சேர்பவர்கள் அத்தீயவர்கட்குரிய இயல்புகளுடை யவராயிருக்க வேண்டும், நல்லவரைச் சேர்பவர்கள் அந்நல்லவர்கட்குரிய இயல்புகள் உடையவரா ருக்க வேண்டும். அவ்வவ்வவரோடு ஒத்த இயைபு இல்லை யானால் அவர் தமக்குள் நேசம் உண்டாகமாட்டாது; அது போலவே கடவுளைச் சார வேண்டுவார்க்கு அவரோடு ஒத்த இயல்பு இன்றியமையாது வேண்டற்பாலதாகும். இனிக் கடவுளிடத் துள்ள இயல்பு பேர் இரக்கமும் பேரன்பும் பேரருளுமேயா மென்பது தெளிவாக விளங்குதலால், அவரைச் சார விரும்பும் நாமும் அவரிடத்துள்ள அவ்வுயர்ந்த தன்மைகளை நம்பால் தோற்றுவித்துக் கொள்ளல் வேண்டும். நம்மைப் போன்ற மக்களிடத்து மட்டுமேயன்றி, நம்மினுந் தாழ்ந்த எல்லா உயிர்களிடத்தும் நாம் பேர் இரக்கம் வைத்து ஒழுகுதல் வேண்டும். மற்றோர் உயிர் துன்புறுவதைக் கண்டும், அது நம்மினுந் தாழ்ந்த உயிர்தானே என்று இரக்கங் காட்டாது வன்னெஞ்சம் பூண்டு நடத்தல் மிகப் பொல்லாத தாகும். கடவுளைவிட எத்தனையோ கோடி மடங்கு நாம் தாழ்ந்தவர் களாயிருந்தும், அவர் நம்மைக் கண்டு, ஓ! இவர்கள் நம்மினும் மிகத் தாழ்ந்தவர்கள் நாம்இவர்களைக் கருதற் பாலம் அல்லம்’ என்று வன்னெஞ்சம் வைத்து வாளா இருக்கின்றனரா? இல்லையே.

ஒரு நொடிப்பொழுதேனும் அவர் வாளா இராமல் நமக்கு வேண்டிய நலங்களை யெல்லாம் உதவி நம்மைத் துன்பத்தினின்றும் தூக்கி யெடுத்துக் கொண்டே வருகின்றா ரன்றோ? நம்மால் மிகப் புல்லியவாகக் கருதப்படுகின்ற சிறிய புழுவிற்கும் உடம்பைப் படைத்துக் கொடுத்திருக்கின்றார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/98&oldid=1591068" இலிருந்து மீள்விக்கப்பட்டது