உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

❖ ✰ மறைமலையம் – 27

6

இவ்வுலகம்இன்றி எங்கும் வெறு வெட்ட வெளியாயிருந்தால் நமக்கேதேனும் அறிவு விளங்குமா? நமது அறிவு விளக்கத் திற்கு இன்றியமையாக் கருவிகளான இவ்வுடம்பையும் உலகத்தையும் வெறும் பொய்ப்பொருள்கள் என்று சொல்வோர் கடவுளின் படைப்புத் தொழிலையே பொய்யென்று இகழ்ந்தவர் ஆவர்.

உணர

ஆதலால் மெய்ப்பொருள்களான இவற்றை உள்ள வாறு உணர இவற்றினிடத்தே கடவுளின் பேரன்பின் அடையாளங்களைப் பிறழாமற் கண்டு வருகின்றோம். இவையனைத்தையும் கடவுள் எதற்காகப் படைத்தார்? நமக்கு அறிவினை எழுப்பி இன்பத்தைக் கொடுத்தற்கன்றோ? இறைவன் எல்லாம் உடையவராகவும், இரக்கம் உள்ளவ ராகவும் இருத்தலால் நம்மிடத்து ஏதேனும் ஒன்றைக் ம் கைம்மாறாகப் பெற்றுக் கொள்ளுங் குறிப்பில்லாமலும், நாம் கேளாமலும் தாமாகவே இவற்றைப் படைத்துக் கொடுக் கிறார் என்பதற்கு ஐயம் ஏதேனும் உண்டோ? நாம் கேளாதிருக்கவும், நம்மிடத்தி னின்றுங் கைம்மாறாகப் பெற்றுக்

காள்வது ஒன்று இல்லாதிருக்கவும் அவர் தாமாகவே இத்தனை பேர் உதவிகளையும் நமக்குச் செய்து வருவதை எண்ணிப் பார்க்குங்கால் அவருடைய அன்புக்கு அளவே ல்லை என்பது என்பதுஇனிது பெறப்படுகின்றதன்றோ? அவர் அன்பே உருவாக விளங்குகிறார்; இவ்வுண்மை எல்லாருங் கடைப்பிடித்தற் பொருட்டே,

அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய்அமர்ந்திருந் தாரே

என்று முழுத்தவம் மிக்க திருமூல நாயனார் திருவாய்

மலர்ந்தருளியதும்,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்

பிறவாழி நீந்த லரிது

செய்ததும் என்க.

(குறள் 8)

என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/97&oldid=1591067" இலிருந்து மீள்விக்கப்பட்டது