உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

71

சொல்லும் சொற்களின் சிறப்பைக் கண்டும் அவ்வவா திறங்களை இனிது தெளிந்து மகிழ்கின்றேம். இங்கே ஒவியமும் ஆடையும் சொற்களும் ஆகிய அறிவில்லாப் பொருள்களின் உதவியால் அறிவுடைய உயிர்களின் மேன்மையை உணரப் பெற்றேம். இங்ஙனமே, எல்லா வற்றிற்கும் நிலைக்களமான பேரறிவுப் பொருளாய் மிக நுண்ணியதாய் விளங்கும் கடவுளினுடைய பேரறி வையும் பேராற்றலையும் இவ்வுலக அமைப்பிற் கண்டு கண்டு மகிழ்ந்து வருகின்றேம், கடவுளை அறிவிக்கும் அடையாளங்கள் அத்தனையும் அறிவில்லாத இவ்வுலகத் துப் பொருள் களிலே நன்கு அமைந்து கிடக்கின்றன. இது பற்றியன்றோ திருவள்ளுவநாயனாரும், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு

(குறள் 1)

என்று உலகத்தை அடையாளமாக வைத்து வத்து இறைவனுடைய இருப்பை அறிவுறுத்தியதூஉம் என்க.

ஆகவே, உலகத்துப் பொருள்களை அறியும் அறிவையே முடிவாக வைத்துக் கொள்ளாமல், அவ்வறிவு எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருள் நிலையைக் காட்டும் அடையாளங் களாம் என்றுட்கொண்டு இறைவனோடு ஒன்றுபட்டு நிற்றலே மக்கட் பிறவியினாற் பெறும் பெரும்பேறாம்.

னி

இனி இங்ஙனம் அறியப்பட்ட இறைவன் எல்லா உயிர் களிடத்தும் ஒரே தன்மையான பேரன்புடையனாயிருக்கின்றா னன்பது அவன் செய்துவரும் அரும்பெருஞ் செயல்களால் இனிது விளங்குகின்றது, நாம் உறங்கிக் கிடக்கும்போது எவ்வகையான அறிவுஞ் செயலுந் தோன்றாமல் ஒரு பேரிருளிற் புதைந்து கிடந்ததை விழித்த பின் அறிகின்றேம் அல்லமோ? இவ்வாறே இவ்வுலகமும் உடம்பும்இல்லாமல் இருளிலேயே அழுத்திக் கிடந்தோமாயின், கடவுள் இன்ன ன்ன தென்றும் உயிர்களாகிய நமது நிலைமை இன்னதென்றும் நமக்குச் சிறிதேனும் புலப்படுமா? புலப்படாதே, நமதறிவு விளங்குவதற்கு உதவியாய் நிற்கும் இவ்வுடம்புடன் கூடி நிற்பதனால் அன்றோ நாம் இவையெல்லாம் அறியப் பெறுகின்றேம்? இவ்வுடம்போடு கூடிய விடத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/96&oldid=1591066" இலிருந்து மீள்விக்கப்பட்டது