உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

❖ 27✰ மறைமலையம் – 27

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

என்றும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவ னடிசேரா தார்

(குறள் 5)

(குறள் 10)

என்றும் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்தார். அது நிற்க.

அங்ஙனமாயினும், கடவுள் என்று ஒரு பெரும் பொருள் உண்டென்பதற்கு அடையாளம் என்னையெனிற் கூறுவாம். அறிவில்லாத பருப்பொருள்கள் மட்டுமே கண் முதலிய பொறிகளுக்குப்புலனாகும். அறிவில்லாத பொருள் களினும் மிக நுண்ணியவாயிருப்பன பொறிகளுக்குப் புலனாகா; கல்லும் மண்ணுந் தண்ணீரும் நம்முடைய பொறிகளுக்குப் புலனாவது போலக் காற்றும் வெளியும் நமக்குப் புலனாவ தில்லையே. இன்னும் அறிவும் இன்னும் அறிவும் அறிவுடைய ய உயிரும், அறிவில்லாத நுண் பொருள்களைப் பார்க்கிலும் இறப்ப ண்ணிய பொருள்களாய் இருத்தலால், அவை நமது பொறியுணர்வுக்குச் சிறிதும் புலப்பட மாட்டா என்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. என்றாலும், அறிவுடைய உயிர்ப் பொருள்களை நாம் தெரிந்து கொள்வதற்கு அறிவில்லாத பருப்பொருள்கள் கருவியாயிருந்து நமக்குப் பேருதவி புரிகின்றன.

இந்த உலகமும் இந்த உடம்பும் ல்லையானால் நமக்கேதேனும் அறிவு விளங்குமா? அதனைக் கூர்ந்து நினைத்துப் பாருங்கள்! ஒருவனுடைய உயிரின் இருப்பையும் அதன் தன்மையையும் யாம் எங்ஙனம் உணர்கின்றேம்? அவன் உடம்பிற் காணப்படும் செயல்களையுங் குறிப்புகளையுங் கொண்டன்றோ? ஒருவன் ஒவியம் எழுதுவதில் வல்லவன் என்றும், ஒருவன் நெய்தற்றொழிலில் வல்லவன் என்றும், ஒருவன் கல்வியில் வல்லவன் என்றும் எங்ஙனம் அறிகின்றேம்? ஓவியத்தில் எழுதப்பட்ட வடிவங்களின் அழகைக் கண்டும், நெய்யப்பட்ட ஆடையின் நுட்பத்தைக் கண்டும், எடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/95&oldid=1591065" இலிருந்து மீள்விக்கப்பட்டது