உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

69

வாங்கிப் போய் அவற்றைச் சுவைத்துப் பார்க்க அவை யெல்லாம் புளிப்பாயிருக்கக் கண்டு ஏமாந்து வருந்துதலைக் காண்கின்றேம் அல்லேமோ? உலகத்துப் பொருள்களைப் பற்றிய உண்மைகள் ஒன்றி னொன்று இயையாது பெரும் பாலும் வேறு வேறாய் தனித்து நிற்றலால், இவை சிறிய உண்மைகள் என்றும் இவற்றை அறியும் அறிவு சிற்றறிவு என்றும் சொல்லப்படுகின்றன.

இனி இச்சிற்றறிவு உள்ள வரையில் உயிர்களுக்குத் துன்பம் விலகாது. பேரின்பத்தை அடையவேண்டுமென்னும் நோக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருத்தலால், அதனைப் பெறுதற்கு வாயிலான பேரறிவு நிகழ்ச்சி இன்றியமையாது வேண்டற் பாலதாகும். சிற்றுயிர்களான நம்மிடத்துப் பேரறிவு நிகழ வேண்டுமாயின், அது மிகப் பெரியதாகிய ஒர் உண்மையினை அறியும் வகையால் மிகுந்து நிகழுமாறு செய்வித்தல் வேண்டும். உலகத்துப் பொருள்கள் எல்லாம் ஒரு தொடர்பு படாது தனித்தனி வேறுவேறு சிறு பொருள் களாய் இருத்தலோடு அறிவில்லாதனவுமாய்க் காணப்படுத லானும், உயிர்கள் அறிவுடையனவாய்க் காணப்படினும் அவை சிற்றறிவுஞ் சிறு தொழிலும் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடுகளும் உடையன வாய்த் துன்பக் கடலுட் கிடந்து உழல்வனவாய் நிலைமாறி வருதலானும்இவற்றை யறியும் அறிவெல்லாம் சிற்றறிவுக ளாகவே முடியும். ஆனதனால், எங்கும் ஒரே தொடர்புடைய முழுமுதற் பெரும் பொருளாய் விளங்குங் கடவுளை அறியும் அறிவே வேறுபாடில்லாத பேரறிவாகுமென்பது துணியப்பட்ட பொருளாம். கடவுள் எல்லையற்ற பெரும் பொருளாதலால் அதனுடைய தன்மை யும் எல்லையற்ற பெருந்தன்மையாகும்; அப் பெருந்தன்மை யின் யல்பை உள்ளவாறு உணர்தலே ஒரு பேருண்மை யாகும், இந்தப் பேருண்மையை உணர்ந்தவர்களுக்கு உலகத்துப் பொருள்களைப் பற்றிய சிறிய உண்மைகள் எல்லாம் தரமாகவே விளங்கும். இவ்வுண்மையை உணரும் பேரறிவு வாய்க்கப் பெற்றவர்களுக்கு எவ்வகைத் துன்பமும் வர மாட்டா. இது பற்றியே, து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/94&oldid=1591064" இலிருந்து மீள்விக்கப்பட்டது