உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

❖ ❖ மறைமலையம் - 27

எவரும் அறிந்து கொள்வர். ஆகவே, எவ்வெப் பொருளை ஆராயப் புகினும் அவ்வப் பொருள்களின் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்வதே மெய்யறிவு மேன்மேல் விளங்கப் பெறுதற்கு வாயிலாம் என்க.

இனி உலகத்துப் பொருள்கள் எல்லாம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாற் காணப்படுவன வாய் அறிவில்லாத பொருள்களுமாய் இருக்கின்றன. இப்பொருள் கள் ஒவ்வொன்றன் தன்மையையும் அறியப் புகுந்தால், அவற்றின் எல்லை காண்பதற்கு நமக்குக் காலமும் ல்லை, ஆற்றலும் இல்லை, அல்லது அளவிறந்த காலம் உயிரோ டிருக்கும் வகை தெரிந்துகொண்டு, அவை முழுதும் ஒருங்கே உணர்ந்தாலும், அறிவில்லாத அப்பொருள்களின் உணர்ச்சி யால் நாம் அடையும் பயன் என்னை? ஏதும் ல்லையன்றோ? நீண்ட காலம் உயிரோடிருந்து இப் பொருள்களை அறிவே மென்பார்க்கே இவற்றால் ஏதும் பயன் விளைவதில்லை யாயின், சில வாழ்நாளும் பல் பிணியும்உடைய நம்மனோர் இவற்றை அறிவதனால் யாது பெறப்போகின்றார்? 'உமி குற்றிக் கை சலித்தது' போல அவ்வெறு முயற்சியால் விளைவது பெரு வருத்தமே யல்லாமல் வேறு பயன் சிறிதுமில்லை யென்க. ஆகையால், நமது உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்களை மட்டும் நாம் சிறிது நேரம் ஆராய்ந்து, மற்றை நேரங்களையெல்லாம் மிக உயர்ந்ததோர் அரிய பெரிய உண்மையை ஆராய் தலிலேயே பயன்படுத்தி வருதல் வேண்டும்.

இனி உலகத்துப் பொருள்களுள் எல்லாம் ஒன்றை நோக்க ஒன்று சிறியதாய் இருத்தலால் அவற்றைப் பற்றிய உண்மைகளும் சிறிய ப உண்மைகளாய் இருக்கின்றன. ப்பொருள்களின் தன்மைகளை அறியுங்கால், வை பல்வேறு வகைப்பட்டுக் கிடத்தலால், இவற்றை யுள்ளவாறு உணரப்பெறாமல் மக்கள் பெரிதும் பிழைபட்டுப் போகின் றனர், ஒரு தொகுதியாயுள்ள மாங்கனிகளுள் ஒன்றைச் சுவைத்து அதன் இனிமையை அறிந்துமகிழ்ந்தவன், அத் தொகுதியிலுள்ள மற்றக்கனிகளும் அங்ஙனமே யிருக்குமென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/93&oldid=1591063" இலிருந்து மீள்விக்கப்பட்டது