உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

3. சமரச சன்மார்க்கம்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

(குறள் 355) ‘சமரச சன்மார்க்கம்’ என்னுஞ் சொற்றொடர் 'எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தும் உண்மை நெறி’ என்று பொருள் படுவதாகும். எல்லாரும் ஒன்றுபட்டு அளவளாவும் படி செய்யும் சன்மார்க்கமானது அவர் எல்லாருந் தழுவத்தக்க ஒரு பேருண்மையை இனி தெடுத்து விளங்க அறிவுறுத்து தாகும். 'உண்மை' என்பது என்பது பொருள் களில் என்றும் நிலைபேறாயுள்ள இயற்கையே யாம். உலகத்துப் பொருள்கள் அளவிறந் தனவாய் இருத்த லோடு, அவை ஒவ்வொன்றுந் தத்தமக்கே உரிய சிறப்பியல்பு களும் உடையவாய் இருக்கின்றன. ஒரு பொருளின் உண்மைத் தன்மை மற்றொரு பொருளின் உண்மைத் தன்மையின் வேறாகவே காணப்படுகின்றது. பொன்னின் தன்மை வெள்ளியின் தன்மையின் வேறாகவும்

வை யிரண்டின் தன்மை செம்பின் றன்மையின் வேறாகவும் இருக் கின்றன. மா, புளி, பனை, தென்னை முதலிய மரங்களும் வேறு புற் பூண்டுகளும் தனித்தனி வெவ்வேறு தன்மைகள் உள்ளன வாயிருக்கின்றன. மானும், புலியும், ஆவும், எருமையும், கழுகும், பருந்தும், கிளியுஞ், சிவலும், குயிலும், மயிலும் தனித்தனியே ஒன்றினொன் றொவ்வா இயல்புகள் வாய்ந்தன வாய் இருக்கின்றன. மக்களிலும் ஒருவருடைய குறிகுரல் சாயல் செயல்கள் குறிப்புகள் முதலியனவெல்லாம் மற்றொரு வர் தம் குறி, குரல், சாயல், செயல்கள், குறிப்புகள் முதலியவற்றின் வேறாகவே இருக்கின்றன. ஓரினமான பொருள்களுள்ளும் ஒன்றற் கொன்று வேறான தன்மைகள் உண்டென்பதை ஒரு மானைப் போற் பிறிதொரு மான் இல்லாமையும் ஒரு மகனைப் போல் மற்றொரு மகன் இல்லாமையும் நுணுகி அறிபவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/92&oldid=1591062" இலிருந்து மீள்விக்கப்பட்டது