உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் – 27

அருவமும் உருவாரூப மானது மன்றி நின்ற

உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக்குள்ள வாமே

உலகெலா மாகிவேறாய் உடனுமாய் ஒளியாய் ஒங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவற்றின் றன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீ ரமலனாகி நின்றனன் நீங்கா தெங்கும்

என்னுஞ் சிவஞானசித்தித் திருமொழிகளான் உணர்க.

இதுகாறும் கூறியவற்றாற் சைவ சித்தாந்தந் தவிரப் பிறிது எந்தச் சமயமும் இந்து சமயம் என்னும் பெயர்க்கு உரியதாகாமை காண்க. ஓம் நமச்சிவாய நம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/91&oldid=1591061" இலிருந்து மீள்விக்கப்பட்டது