உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

65

மாயையால் அறிவுவிளங்கப் பெற்று வரும் சித்துப் பொருளா மென்பது

அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய் வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி நசித்திட ஞானச் செய்தி யநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா

மாயையின் வயிற்றுண் மன்னி வருஞ்செயன் ஞானமிச்சை யேயுமிக் கலாதி மூன்றா லேகதே சத்தி னேய்ந்திங் காயுமுக் குணங்க ளந்தக் கரணங்க ளாதி யெல்லாங் காயபந் தங்களாகிக் கலந்துட னிற்கு மான்மா

சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலாயுள்ள வவத்தையுட் டங்கியெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவ மாக்கியும் பலன்க ளெல்லா மருந்தியு நிற்கு மான்மா

என்னுஞ் சிவஞான சித்தித் திருமொ மாழிகளான் நன்கு துணியப்படும், இதன்கண்ணே தன்கண்ணே வினைகளும் வினைகளும் முற்பிறவி பிற்பிறவிகளு முண்டென்பது இனிது பெறப்படுதல் காண்க

இனிக் கடவுள் என்பது சிற்றுயிர்களின் வேறாய் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் எல்லா ஆற்றலும் எல்லா ன்பமும் ஒருங்குடையதாயிருக்கு மென்பதும், அஃது அருவாய் உருவாய் அருஉருவாய் இவையும் அல்லவாய்த் தோன்றுமென்பதும், அஃது உலகுயிர்களுமாய் அவற்றின் வேறுமாய் அவற்றினுள்ளுமாய் இரண்டற நிற்கும் என்பதும், குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானும்

நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமை யானும், நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே

அருவமோ வுருவா ரூப மானதோ அன்றி நின்ற

உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/90&oldid=1591060" இலிருந்து மீள்விக்கப்பட்டது