உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

❖ மறைமலையம் - 27

உபநிடதங்களுட் காணப்படா தென்று பிரம சமாஜத்தார் கூறுவதூஉம் போலியாதல் காண்க.

இனி வைணவர் கூறுமாறு இறைவனுக்கு உருவமட்டு முண்டென்று கூறாமோவெனிற்; கூறாம்; என்னை? அங்ஙனம் வரையறுத்துக் கூறின் அஃது அருவமாதற்குரிய ஆற்றல் உடையதன்றெனவும், உருவுடைப் பொருள்களான நிலன், நீர், தீ, வளி என்னும் இவற்றுள் ஒன்றாய் ஒழியுமெனவுங் கூறப்படு மாகலினென்க.

என்றிங்ஙனங் கூறியவாற்றால் இந்துசமயம் எனப் படுவது இமய முதற் குமரி யீறாக யாண்டும் பொதுவாய்ப் பரவி வழங்கும் பொதுக் கொள்கைளாதலாலும், இக் காள்கைகளுட் சில சில வெடுத்து வற்புறுத்து அவை தம்மைமட்டுங் கைக்கொண்டுவரும் சாருவாகம், பௌத்தம் முதலிய சமயங்கள் இந்துசமயப் பிரிவாய்ச் சிறியனவாய் அதன்கண் அடங்குதலும், இந்துசமயப் பொதுக் கொள்கை கள் விரிந்த இலக்கண முடையவாய் இவற்றையெல்லாம் தம் அகத்தே யடக்கி விரிதலும், இக் கொள்கைகள் எல்லா வாற்றானும் பொருத்த முடையவாய் விளங்கலும் அறி வுறுத்தப்பட்டன.

க்

2னி இவ்விந்துசமயம் 6 எனப்படுவ தியாதென்று உண்மை யான் ஆராயும்வழி அதுவே சைவ சித்தாந்தம் என்னும் வேறு பெயரான் வழங்கப்படுவதென்பது இனிது புலப்படா நிற்கும்.

சடமாகிய உலகமும் சித்தாகிய அறிவும் வேறு வேறாமென்பதும், அறிவுடைப் பொருள் உயிராமென்பதும் சித்தாந்தத்தின் கொள்கைகளாம்; இதற்கு மேற்கோள்:

அசத்தறியாய் கேணி யறிவறிந்த வெல்லாம் அசத்தாகு மெய்கண்டா னாயின் - அசத்தலாய் நீரி லெழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும்

ஓரினவை யின்றாமா றொப்பு

இவ்வுயிர் இருவினைகளுட்பட்டுப் பிறப்பிறப்புக்களிற் சுழன்றுகொண்டு இயற்கையே அறியாமையுடைத்தாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/89&oldid=1591059" இலிருந்து மீள்விக்கப்பட்டது