உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

❖ ❖ மறைமலையம் - 27

நமது கடமையாயிருக்க, அதனைச் சிறிதும் நினையாது தமது நலத்தையே பேணுதல் எவ்வளவு கொடுமை!

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போற் போற்றாக் கடை

(குறள் 315) என்ற திருக்குறளின்படி அங்ஙனங் கொடுமை செய்து நடப்பவர் அவர் அறிவில்லாக்

கற்றவரேயாயினும்

கயவரேயாதல் உண்மை. வந்த விருந்தினர் பசியோடு புறத்தே வருந்தியிருக்க, அதனை நினையாது அகத்தே தம் பாழ்வயிறு நிரம்பச் சோற்றையிட்டு மகிழ்வோர் மக்கட் பிறப்பின ரென்றும் எண்ணப்படுவரோ?

விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

(குறள் 82)

என்னுந் தெய்வப் புலவர் திருமொழியால் விருந்தினரைப் புறத்தே வைத்துண்ணுதலினும் அறக்கொடியது வேறில்லை யென்பது தெளிந்தாம் அல்லமோ? பிறப்பளவிலே தம் மனம் போனவாறு உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு ஒருவரோடொருவர் அன்பின்றிப் பகைகொண்டு இறுமாந்து நடத்தல் மக்கட் பிறப்பின் பயனையும் இறைவன் திருவருட் பேற்றையும் இழத்தற்கே வழியாம் என்க.

னி

இனி நம்மினுந் தாழ்ந்த கூன், குருடு, சப்பாணி மாட்டாதார் முதலியோரிடத் தெல்லாம் இரக்கமும் அன்புங் காட்டுவதோடு, அன்பின் முதிர்ச்சியான அருளுங் காட்டுதல் வேண்டும்,அவர்களிடத்து ஏதொன்றனையும் எதிர்பாராமல் அவர்கட்கு இன்றியமையாது வேண்டும் எல்லா உதவிகளும் செய்து அவர்களைத் தூயராக்குதல் வேண்டும், அவர்கள் தாம் முற்பிறவிகளிற் செய்த தீவினை பயத்தால் உறுப்புகள் குறைந்தும் வலிவிழந்தும் பிறந்து வருந்துகின்றமையால், அவர்போல் நாமும் நடந்தால் நமக்கும் அவ்வாறே குறைந்த பிறவிகள் வரும் என்பதை ஒவ்வொருவரும் நன்கு நினைந்து பார்த்து, அவரிடத் தெல்லாம் அருள் கனிந்து ஒழுகுதல் வேண்டும். 'அவர்களைக் குறைவுள்ள தாழ்ந்த பிறவியினும், என்னைக் குறை வில்லாத உயர்ந்த பிறவி யினும் வைத்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/101&oldid=1591071" இலிருந்து மீள்விக்கப்பட்டது