உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

கடமைப்பட்டிலேம்

77

வினையே யாகையால், யாம் அவர் களுக்கு உதவி செய்யக் என்று உரைப்பவர்கள், தம்மை அவர்கள் நிலைமையில் வைத்துப் பார்த்தால் உடனே தமது எண்ணத்தை மாற்றி விடுவார்கள். தாம் ஒருவர் வீட்டுப் புறந்திண்ணையிற் காதடைத்து நாவறண்டு நெஞ்சுலர்ந்து பசித்துக் களைத்துக் கிடக்கும்படி நேர்ந்த காலத்துத், தம்மை அவ்வீட்டாரேனும் பிறரேனும் ஏனென்று கேளாதும் பாராதும் போவராயின் அங்ஙனம் வினைப்பயனை மேலெடுத்துப் பேசின அவர் ஏதுதான் நினைப்பர்! அவர்கள் கேளாதும் பாராதும் போனதும், தாம் எவராலும் பேணப் படாது வறிதே வருந்திக் கிடந்ததும் எல்லாம் வினைப்பயன் என்று எண்ணிக் கிடப்பரோ? கிடவார் அன்றே. கி

தாம் வினைப்பயனால் வருந்தினாலும், அதனால் விளையும் வருத்தத்தைத் திருவருளுதவி கொண்டு நீக்கும் நல்லோர் துணையை நாடியே இருப்பர். ஒருவர் ஓர் ஆட்டை அறுப்பது கண்டு ‘அவர் அதனைத் தமது உணவுக்குக் காள்கின்றார்; அஃது அதன் வினை; நாம் அதனை விலக்கக் கடவம் அல்லம்' என்று வாளா இருந்தவர் தம்மை ஒரு புலி பிடிக்க வருங்காலத்துப் பிறர் அதனைக் கண்டு விலக்காது 'இப்புலிக்கு இரையாக வேண்டுவது இவர் வினையாதலின், இதனை யாம் விலக்கற் பாலம் அல்லம்' என்று கூறிப் போவாராயின், அது கண்டுஅவர் நெஞ்சம் பதையாது வாளா இருக்குமோ? இராதன்றே. ஆகையால், வினையினால் நேரும் தீய செயல்களைத் தமது தூய அறிவினாலும் திருவருட்டுணை யினாலும் முயன்று விலக்க முந்தும் நல்லோர் அருட்டன்மை உண்மைச் சிவ குணமாம் என்று தெளிந்து கொள்ளல் வேண்டும்.இவ்வாறு இரக்கமும் அன்பும் ருளும் எல்லையின்றி மிகப் பெற்றோர் களங்கம் அற்ற தூய உயிர்களாய் இவ்வியல்புகளுக்குத் தூய நிலைக் களனான சிவத்தாற் பற்றப்பட்டு அச் சிவத்தில் அழுந்திச் சிவ வடிவாய் நிலைமாறாமல் நிற்பரென்பது உண்மை.

இவ்வாறு இறைவனது உண்மைப் பெருநிலையை இனி துணர்ந்து, அவ்வுணர்ச்சி வலியால் இரக்கமும் அன்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/102&oldid=1591072" இலிருந்து மீள்விக்கப்பட்டது