உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

83

IT .

கொள்ள மாட்டா. அறிவுடைய சிற்றுயிர்களோ தாம் உருவங் களைப் பெறுவதற்கு முன் அறிவு மழுங்கிக் கிடந்தமையால் அ வகளும் உருவங்களைச் செய்து சய்து கொள்ளமாட்ட கலங்கிய நிலையில் ஏதோ ருருவமுமின்றி இருந்த எல்லாப் பொருள்களும் உருவங்களைப் பெறுதற்கு ஒரு பேரறிவின் உதவி இன்றியமையாத தென்பது சிறிது ஆய்ந்துணர வல்லார்க்கும் இனிது விளங்கும். அதனால் அத்தகைய பேரறிவு வாய்ந்த கடவுளொருவர் உண்டென் னும் உண்மை ஐயமின்றித் துணியப் படுவதாகும். இவ் வுலகத்திற் காணப் படும் எல்லா உருவங்களுக்கும் முதல் கடவுளுடைய அறிவின் கண் உண் L ன்பதும் இது கொண்டு முடிக்கப்படும். ஓ வியக்காரன் வரையும்

ஓவியங்

களின்

உருவங்களுக்கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்திருத்தல் போலவும், சிற்பம் வல்லான் ஒருவன் அமைக்கும் பாவைகள், உருக்கள், கட்டிடங்கள் முதலான வற்றின் வடிவங்கட்கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்துகிடத்தல் போலவும், காவியங்கள், கதைகள், அறிவுநூல்கள் முதலியவற்றிலெல்லாம் உள்ள உண்மை களின் வடிவங்களுக்கு முதல் அவற்றை இயற்றிய புலவனறி வின்கண் விளங்கி நிற்றல் போலவும், இவ்வுலகு உயிர்களிற் காணப்படும் எல்லா எல்லா வடிவங்களுக்கும் முதல் கடவுள் அறிவின்கண் உண்டென்பது திண்ணமாம்.

பருப்பொருளிற் காணும் வடிவங்கள் சிலபல காலத் துள் அழிந்துபோதல் போலஅறிவுப் பொருளில் அமைந்த உருவங்கள் அழியாது எஞ்ஞான்றும் நிலைபெற்றிருக்கு மென்பது மேலே காட்டப்பட்டமையின், கடவுள் அறிவின் கண் உள்ள எல்லையற்ற உருவங்கள் அத்தனையும் ஒரு காலும் அழியமாட்டாவென்று கடைப்பிடிக்க பிரெஞ்சு தேயத்திற் புகழ்பெற்று வயங்கிய இயற்கை நூற்புலவர் பாரடக் என்பார் நுண்ணிய பொறிகள் பலவற்றின் உதவி கொண்டு பல்லாண்டுகளாக ஆராய்ந்து கண்ட முடிபுகளும் அறிவுக்கு உருவமுண் டென்பதையும், அஃது ஏனை உருவங் களைப் போல் அழியாது என்றும் நிலை பேறாயுளதா மென்பதையும் இனிது நாட்டுகின்றன. இவைகளை எல்லாம்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/108&oldid=1591078" இலிருந்து மீள்விக்கப்பட்டது