உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் - 27 –

ஆராய்ந்து பாராமற் கடவுளுக்கு வுளுக்கு உருவமில்லை யென எளிதில் கூறிவிடுவது அறிவு வளர

முறையாகாது. அது கிடக்க.

வேண்டுவார்க்கு

இனி, உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள் களின் வடிவங்களும் - அவை எத்துணை இழிந்தனவாயினும், அன்றி எத்துணை உயர்ந்தன வாயினும், அவை எத்துணைச் சிறியனவாயினும், அன்றி எத்துணைப் பெயரியனவாயினும் - எல்லாம் மக்களாலாவது, ஏனை உயிர்களாலாவது அன்றி அறிவில்லாப் பொருள்களாலாவது தாமாக அமைக்கப் பட்டன வல்லவே! அவையெல்லாம் முழுமுதற் கடவுளின் அறிவால் ஆக்கப்பட்டன வல்லவோ? அவ்வறிவால் ஆ க்கப்பட்ட அவ்வடிவங்கள் அத்தனைக்கும் முதலான நுண்ணிய உருவங்கள் அதன் அறிவின்கண் அமைந்து கிடப்பன வல்லவோ? ஒரு கண்ணாடியின் பக்கத்தேயுள்ள பொருள்களின் வடிவங்களோ டொத்த வடிவங்கள் அக்கண்ணாடியின்கண் விளங்கித் தோன்றுதல் போல இறைவனது பேரறிவாகிய பெருங் கண்ணாடியின் எதிரே யுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் ஒத்த அருள் உருவங்கள் அதன்கண் விளங்கித் தோன்றுமல்லவோ? ஆதலால், மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைந்து வணங்கினாலும் அவ்வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாதாய், அதற்கு முதலான இறைவனது அருட்பொருள் உருவத்தின்கட் செல்லுமென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம். கடவுள் அருளின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதற்குக், குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாத லானும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமை யானும் நிறுத்திடும் நினைந்த மேனி நின்மல னருளி னாலே

என்னும் சிவஞான சித்தியார்த் திருமொழியே சான்றாம்.

எந்த வடிவில் வழிபடுவார்க்கும் இறைவனருள் உண்டென்பதற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/109&oldid=1591079" இலிருந்து மீள்விக்கப்பட்டது