உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே

85

என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருமொழியே சான்றாகும்.

இனிக் கடவுளுக்கு உருவமில்லை யென்றும், அவர் அருவமாகவே இருப்பாரென்றும், அவர் குணமற்றவ ரன்றும், அதனால் நிர்க்குணோபாசனையே சிறந்த

தன்றும் நன்றாய் ஆய்ந்து பாராமற் கூறுஞ் சொற்கள் பொருளற்ற புன்மொழிகளாய் இருக்கின்றன. ஏனெனிற், பேரறிவுப் பொருளாகிய அதற்கு அறிவும், பேரருட் பொருளாகிய அதற்கு அருளும், பேரின்பப் பொருளாகிய அதற்கு இன்பமும், பெருவல்லமைப் பொருளாகிய அதற்கு வல்லமையும் அரிய பெரிய குணங்களாயிருக்க அதனைக் குணமற்ற நிர்க்குணப் பொருள் என்பது எவ்வாறு பொருந்தும்? குணமில்லாத பொருள் எங்கேனும் உண்டா? குணமில்லாதது பொருளாகுமா? என்று இங்ஙனமெல்லாம் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கவல்லார்க்கு நிர்க்குணம் நிர்க்குணோபாசனை முதலிய சொற்களெல்லாம் பொரு ளில்லாத வெற்றாரவார உரைகளேயாம் என்பது தெளிவாக விளங்கும். அங்ஙனமாயின், அங்ஙனமாயின், அறிவு நூல்கள் சிற்சில டங்களிற் கடவுளை நிர்க்குணர் என்றோதுவது ஏனெனிற், சத்துவம், இராசதம், தாமதம் என்னுந் தூயவல்லாப் பருப்பொருட் குணங்கள் மூன்றும் அவரிடம் இல்லை யென்பதை உணர்த்துதற் பொருட்டாகவே அங்ஙனம் அவை ஒவ்வோரிடங்களிற் கூறுகின்றனவல்லாற் பிறிதில்லை யன்பது சிவஞானபோதமாபாடியத்தில் நன்கு விளக்கப் பட்டிருக்கின்றது.

னிக் கடவுள் பேரறிவுப் பொருளென்பது முடிக்கப் பட்டதனாலும், அவ்வறிவும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் உண்டுபண்ணியதொன் றாகையால் அவற்றை உண்டு பண்ணுதற்கு முன்னும் பின்னும் எப்போதும் அவர் அறிவின்கண் அவற்றிற்கு முதலான எல்லா உருவங்களும் உண்டென்பது பெறப்படுதலானும் கடவுள் அருவாய் இருப்பரென்னு முரையும் வெற்றுரையே அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/110&oldid=1591080" இலிருந்து மீள்விக்கப்பட்டது